வெள்ளி, 5 மே, 2023

பஜ்ரங் தளத்தின் சுருக்கமான வரலாறு

 வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தளம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. சட்ட விரோத மதமாற்றம், லவ் ஜிகாத் போன்ற பிரச்னைகளில் சிறுபான்மையின கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் துன்புறுத்தியதாக இந்த அமைப்பு மீது பல்வேறு புகார்கள் உள்ளன.

பஜ்ரங் தளம் தோற்றம்

பஜ்ரங் தள் என்பது வலதுசாரி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) இளைஞர் பிரிவாகும். அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்காக, ராம ஜென்மபூமி இயக்கத்தில் இளைஞர்களை ஈர்க்க 1984ல் உருவாக்கப்பட்டது.
அதாவது, அக்டோபர் 8, 1984ல் தோன்றியது. அப்போது இந்து துறவிகள் ராமர்-சீதா தேவி யாத்திரையை தொடங்கினர். அதற்கு பாதுகாப்பு வழங்க உத்தரப் பிரதேச அரசு மறுத்துவிட்டது.
அப்போது, பாதுகாப்பு பணியில் பஜ்ரங் தளம் இளைஞர்கள் ஈடுபட்டனர் என அமைப்பின் இணையதளத்தின் வாயிலாக அறிய முடிகிறது.

முன்னதாக, லக்னோவில் நடைபெற்ற கூட்டத்தில், வாரணாசி மகாநகர் பிரச்சாரகராக இருந்த வினய் கட்டியார், விஎச்பி தலைவர் அசோக் சிங்காலிடம், விஎச்பிக்கு சொந்தமாக இளைஞர் அமைப்பு வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
எனவே, பஜ்ரங் தளம் முறைப்படி உருவாக்கப்பட்டது. ராமர் கோவில் இயக்கத்துடனான அதன் தொடர்பை முன்னிலைப்படுத்த அதன் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதாவது பஜ்ரங் பலி என்பது ஹனுமன் பெயர்களில் ஒன்றாகும். மேலும் அதன் முழக்கம் “ராம் காஜ் கீன்ஹே பினா, மோஹே கஹான் விஷ்ரம் (ராமரின் காரணத்தை நிறைவேற்றாமல் நான் எப்படி ஓய்வெடுப்பது? என்பதே ஆகும்.

டிசம்பர் 1992 வரை, ராமர் கோவில் கோரிக்கைக்கு ஆதரவைத் திரட்டுவதிலும், இறுதியில் பாபர் மசூதி இடிக்கப்படுவதிலும் பஜ்ரங் தளம் முக்கியப் பங்காற்றியது.
இருப்பினும், அயோத்தி பிரச்சினை நீதிமன்றத்திற்குச் சென்று, பாஜக தனது அரசியல் தடத்தை விரிவுபடுத்தத் தொடங்கிய சில ஆண்டுகளில், விஎச்பி மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் வெளிச்சத்திலிருந்து மறைந்துவிட்டன,

மேலும் அவற்றின் உறுப்பினர்களில் பலர் பாஜக மீது வெறுப்புணர்வைக் கொண்டுள்ளனர்.

பஜ்ரங் தளம் எப்போதாவது தடை செய்யப்பட்டதா?

ஆம், பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நரசிம்மராவ் அரசால் தடை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டுக்குப் பிறகு இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
லண்டனில் உள்ள கிங்ஸ் இந்தியா இன்ஸ்டிடியூட்டில் இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் பேராசிரியரும், சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டில் வசிக்காத அறிஞருமான கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட், தி இந்தியன் எக்ஸ்பிரஸில், “பஜ்ரங் தளத்துக்கு ஓர் சீருடை இல்லை. ஆனால் அவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் ராமர் என்ற வார்த்தை மற்றும் காவி டர்பன் வாயிலாக தங்களை ஒருவர் ஒருவர் அடையாளம் கண்டுக்கொண்டனர்.

எனவே, 1993 இல் அதன் மீதான தடை நீக்கப்பட்ட பிறகு, பஜ்ரங் தளத்திற்கு கூடுதல் கட்டமைப்பும் கட்டுப்பாடும் தேவை என்று சங்க பரிவாரம் முடிவு செய்தது” என எழுதினார்.
எனினும் பஜ்ரங் தளம் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டது. காதலர் தினத்தில் காதலர்களை துன்புறுத்துதல், இந்துக்களின் உணர்வுகளை புன்படுத்திவிட்டனர் என பல போராட்டங்களை நடத்தியது.

1999 இல் ஒடிசாவில் ஆஸ்திரேலிய மிஷனரி கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது மகன்கள் கொலை வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதேபோல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகாவின் சுல்லியா அருகே 19 வயதான மசூத் கொல்லப்பட்ட வழக்கிலும் இந்த அமைப்பின் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில், 2013-ல் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், 2008-ல் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானும் அதைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர்.

2002ல், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், பஜ்ரங் தளத்தின் சப்தத்தை குறைக்குமாறு வற்புறுத்தியதாக, 2008ல் எல்.கே. அத்வானி மீண்டும் கூறினார்.

பஜ்ரங் தளம், செயல்பாடுகள்

பஜ்ரங் தளம் தனது செயல்பாடுகளாக, மத வழிபாடு தலத்தை மேம்படுத்துதல், மீட்பு, மத சபைகளில் ஒழுங்கு, இயற்கை பேரிடர் காலங்களில் உதவி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது.
மேலும், போராட்டங்கள் மூலம் உருவாக்கப்படும் பொதுக் கருத்தைத் தொடர்புபடுத்துவதற்கும், விரிவாக்கம் செய்வதற்கும் திட்டங்களைத் தயாரிக்கிறது.

இந்து மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் போன்றவற்றின் மீது வீசப்படும் அவமதிப்புகளுக்கு எதிரான போராட்டங்கள்; தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் அழகுப் போட்டிகள் மூலம் காட்டப்படும் ஆபாச மற்றும் ஆபாசத்திற்கு எதிரான போராட்டங்கள்; சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிர்ப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும்.


source https://tamil.indianexpress.com/explained/pm-modi-springs-to-bajrang-dals-defence-a-brief-history-of-the-forever-fringe-outfit-659745/