ஞாயிறு, 21 மே, 2023

தென்னிந்தியாவில் முதன்முறையாக தேயிலை கண்காட்சி – அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!

 20 05 2023

தென்னிந்தியாவில் முதன் முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை
கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி கோத்தகிரியில் காய்கறி கண் காட்சி.
கூடலூரில் வாசனை திரவியங்கள் கண்காட்சி நடைபெற்றது. தற்போது உதகையில் மலர்
கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் தேயிலை திருவிழா துவக்கப்பட்டுள்ளது.

இதில், டைகர் ஹில் டேன் டீ பகுதியில் தேயிலை தோட்டத்தில் 1200 தேயிலை
தொழிலாளர்கள் இணைந்து மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை
சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித்
ஆகியோர் துவங்கி வைத்தனர். தொடர்ந்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில் துவங்கிய
தேயிலை கண்காட்சியை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி
சுற்றுலா பயணிகள் பார்வைக்காக திறந்து வைத்தார்.

நீலகிரி சில்வர் டீ, க்ரீன் டீ, ஆர்த்தோடக்ஸ் டீ, ஒயிட் டீ உள்ளிட்ட பல்வேறு வகையான தேயிலை தூள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. அது மட்டுமின்றி சுற்றுலா தேநீர் சுவைத்து பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனோடு கலப்பட
தேயிலைதூளை கண்டறிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகளின் அவற்றை கண்டு ரசித்து ருசித்துச் வருகின்றனர்.


source https://news7tamil.live/tourism-minister-ramachandran-inaugurated-the-first-tea-exhibition-in-south-india.html