5 5 23
பிரதமர் மோடியின் ஆவணப்படத்திற்கு தடை விதித்த தமிழக அரசு முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்தும் கேரளா ஸ்டோரி படத்திற்க்கு பாதுகாப்பு அளிப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின்மாநில பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி திருத்துறைப்பூண்டியில் பேட்டி அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கடை தெருவில் தமிழ்
மலையாளம் கன்னட மொழி ஐந்து மொழிகளில் இன்று வெளியாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் உள்ள இந்த திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி, முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தி சில திரைப்படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் ஆவணப்படத்திற்கு தடை விதித்த தமிழக அரசு முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்தும் இதுபோன்ற படங்களுக்கு தடை விதிக்காமல் பாதுகாப்பு அளிப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை முஸ்லிம் மதத்துக்கு மாற்றி சிரியாவுக்கு அனுப்பியது போன்ற சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று உண்மைக்கு புறம்பான சம்பவங்கள் திரைப்படங்களில் இடம் பெறுவதை
தணிக்கை துறை மூலம் மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், முஸ்லிம் சமுதாயத்திற்கு ஓர் பிரச்சனை என்றால் முஸ்லிம் சமுதாயம் மட்டுமே போராட வேண்டுமா, மற்ற சமுதாயத்தினரும் இணைத்து குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
source https://news7tamil.live/it-is-shocking-that-the-tamil-nadu-government-which-banned-the-modi-documentary-is-protecting-the-film-kerala-story-tamimun-ansari-interview.html