சனி, 3 ஜூன், 2023

மேகதாது அணைத் திட்டம் ராமநகரம் மாவட்டத்தில் பெங்களூருவில் இருந்து 100 கிமீ தெற்கே, காவிரி தமிழ்நாட்டிற்குள் நுழையும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

 2 6 23

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்று 10 நாட்கள் ஆன நிலையில், பெங்களூருக்கு குடிநீர் வழங்கும் திட்டம் தொடர்பாக மோதிக் கொள்கின்றன.

என்ன நடந்தது?

கர்நாடக மாநிலத்தின் தமிழக எல்லையான மேகதாதுவில் காவிரியில் அணை மற்றும் நீர்த்தேக்கம் கட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தீர்மானித்துள்ளார்.
இதற்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தில் உள்ளன.

இது தொடர்பாக துரைமுருகன், “காவிரி ஆற்றின் குறுக்கே அனுமதியின்றி கட்டப்படும் எந்தவொரு கட்டுமானமும் தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இது, CWDT இன் 2007 இறுதி உத்தரவு மற்றும் 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும்.

இதற்கிடையில், சர்ச்சைக்குரிய அணை கட்டும் பணியை கர்நாடகா தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும் என தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவகுமாரின் கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

1956-ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகள் சட்டத்தின் கீழ், கர்நாடகா நதியின் இயற்கையான போக்கைத் தடுக்கவோ அல்லது மாற்றவோ சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று பழனிசாமி கூறினார்.

காவிரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பான இறுதித் தீர்ப்பையும் அவர் குறிப்பிட்டு, நதியோர மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு நீர்ப்பாசனத் திட்டத்தையும் தொடங்க முடியாது என்று வலியுறுத்தினார்.

2018 டிசம்பரில், தான் முதலமைச்சராக இருந்தபோது, கர்நாடகாவில் இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வை நிறுத்தக் கோரி, பிரதமருக்கு பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

மேகதாது திட்டம் என்றால் என்ன?

மேகதாது அணைத் திட்டம் ராமநகரம் மாவட்டத்தில் பெங்களூருவில் இருந்து 100 கிமீ தெற்கே, காவிரி தமிழ்நாட்டிற்குள் நுழையும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த திட்டம் பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரியதாக உள்ளது.

48 டிஎம்சி (ஆயிரம் மில்லியன் கன அடி) கொள்ளளவு மற்றும் ரூ. 6,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த அணை, பெங்களூருவுக்கு குடிநீர் வழங்குவதையும், பிராந்திய நிலத்தடி நீர்மட்டத்தை நிரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நவம்பர் 2014 இல், கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டியது. அதன் 2015 பட்ஜெட்டில், விரிவான திட்ட அறிக்கைக்கு ரூ.25 கோடி ஒதுக்கியது. அப்போது சித்தராமையா ஆட்சியில் நீர்வளத்துறை அமைச்சராக சிவக்குமார் இருந்தார்.

காவிரியில் கிருஷ்ணராஜ சாகர் திட்டத்தை விட மேகதாது அணை பெரியதாக இருக்கும். மத்திய நீர் ஆணையம் (CWC) 2018 இல் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுக்கு அனுமதி அளித்தது.

சிவக்குமார் இந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், இத்திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும், அரசுகள் தாராளமனதுடன் நடந்து கொள்ள வேண்டும்.
மேகதாது விவகாரத்தில் தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அரசு தயாராக உள்ளது. இந்தத் திட்டத்தால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

திட்டத்தின் எதிர்ப்பு வரலாறு

2015 ஆம் ஆண்டில் அணைக்கு எதிராகப் பரவலான போராட்டங்களை தமிழ்நாடு கண்டது, மாநிலம் தழுவிய பந்த் பல்வேறு அமைப்புகளால் நடத்தப்பட்டது.
டிசம்பர் 2018 மற்றும் ஜனவரி 2022 இல் திட்டத்திற்கு எதிராக மாநில சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றியது.

தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு தேமுதிக கேப்டன் விஜயகாந்த் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு ஒன்று பிரதமரை சந்தித்துப் பேசியது.

இந்த திட்டத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரி, கர்நாடகாவில் இருந்து அனைத்துக் கட்சிக் குழுவை சித்தராமையாவும் பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.

ஆகஸ்ட் 2021 இல், இந்தத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. தமிழகத்தின் முக்கிய வாதம், கர்நாடகா நதியின் மீது இரண்டு நீர்த்தேக்கங்களைக் கட்டுவதன் மூலம் நதியின் ஓட்டத்தை மாற்றியமைக்க முயற்சிக்கிறது என்பதே ஆகும்.

இந்த நடவடிக்கை CRWT இன் இறுதித் தீர்ப்பை மீறுவதாகவும், கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி நீர்த்தேக்கங்களுக்குக் கீழே உள்ள இடைநிலை நீர்ப்பிடிப்புப் பகுதியிலும், கர்நாடகா மற்றும் தமிழக எல்லையில் உள்ள பில்லிகுண்டுலுவிலும் நீரோட்டத்தைத் தடுக்கும் என்றும் அரசு வாதிட்டது.


source https://tamil.indianexpress.com/explained/mekedatu-dam-rises-between-friends-cong-and-dmk-what-is-this-long-running-dispute-686400/