வெள்ளி, 30 ஜூன், 2023

அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

 30 6 23

அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது : “ஆளுநர் சர்வாதிகாரி போன்று செயல்படுகிறார்.ஜனநாயகம் இருக்கா இல்லையா என்பது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தான் தெரியும் ஆளுநருக்கு அமைச்சரை டிஸ்மிஸ் செய்வதற்கு அதிகாரம் கிடையாது. சட்டரீதியாக இதனை சந்திப்போம்.

ஆளுநர் தனது வரம்பை மீறி செயல்படுகிறார் இது நல்லதுக்கு அல்ல. அவருடைய அதிகாரம் என்ன என்பது அவருக்கே தெரியவில்லை அமைச்சரவை கூடி என்ன முடிவு செய்கிறதோ அதை ஒப்புக்கொண்டு தன்னுடைய ஒப்புதலை தருவதுதான் ஆளுநரின் கடமை.


பாஜகவின் அடிமையாக உள்ள அதிமுக போன்ற கட்சிகள் மீது மீதான அமலாக்கத்துறை
நடவடிக்கை எடுப்பது கிடையாது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனை நடத்திய போது கட்டு கட்டாக ஆவணங்கள் வெளியில் தூக்கி வீசப்பட்டது.  இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆளுநர் இதுபோன்று அமைச்சர்களை நீக்க முடியுமா?இதற்கு முற்றுப்புள்ளி என்பது 2024 தேர்தல் தான். மக்கள் முடிவு செய்வார்கள்” என ரகுபதி கூறினார்.


source https://news7tamil.live/governor-has-no-power-to-dismiss-minister-minister-raghupathi.html