22 6 23

கருணாதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு. கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் விழா மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், ஆயிரம் பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் பொற்கிழியும், மாற்றுத்திறனாளிகள் 60 பேருக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் 300 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “திமுக பாஜகவை எதிர்க்கிறது. பாஜக திமுகவை எதிர்கிறது. அதனால்தான் நாம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம்.
பாஜகவை திமுக மட்டுமல்ல தமிழக மக்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார்.
தொடர்ந்து, “அமலாக்கத் துறை தொடர்பான கேள்விக்கு ரொம்ப ஜாலியாக செல்கிறது என உதயநிதி பதில் அளித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/udayanidhi-said-that-the-raid-by-the-enforcement-department-is-very-funny-703064/