திங்கள், 19 ஜூன், 2023

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!!

 18 6 23

தமிழ்நாடு திறன் போட்டிக்கான பயிற்சியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் மூலம், இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச அளவிலான திறன் போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 22 வயதுக்குள்ளான இளைஞர்கள் இந்த போட்டியில் பங்குகொள்ள முடியும் . இதற்கான தொடக்க விழா சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்சியில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இந்த திறன் போட்டியில் பங்குபெற நினைக்கும் இளைஞர்கள் http://www.naanmudhalvan.tn.gov.in/tnskills/ இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான கடைசி தேதி ஜுன் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா


source https://news7tamil.live/minister-udayanidhi-started-the-training-for-the-competitive-exams.html