வெள்ளி, 30 ஜூன், 2023

கலைஞர் கைது செய்யப்பட்டபோது என்ன நடந்தது: நீதிபதி சந்துரு விளக்கம்

 29 6 23

karunanidhi

கலைஞர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றம் எப்படி செயல்பட்டது என்பதைப் பற்றி முன்னாள் நீதிபதி கே.சந்துரு விளக்கமளிக்கிறார்.

“நள்ளிரவில் கலைஞர் கைது” புத்தக வெளியீட்டு விழா சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நீதிபதி கே.சந்துரு, “நான் இந்த புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறேன். ஒரு ஊடகவியலாளர் தான் பார்த்ததை அப்படியே எழுதி ஆவணப்படுத்துவது மிகவும் முக்கியம். அப்படி பத்திரிகையாளர் சுரேஷ் குமார்‌ கலைஞர் கருணாநிதி கைதை புத்தகமாக எழுதியது வரவேற்கத்தக்கது.

கலைஞர் கருணாநிதி கைது என்பது வரலாற்றில் முக்கியமானது. 2001-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு அந்த அம்மையார் ஆடாத ஆட்டம் இல்லை. கலைஞர் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றம் எப்படி செயல்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நண்பர் சுரேஷ்குமார் நீதிமன்ற நடவடிக்கைகளை பதிவு செய்துள்ளார்.

அவரது கைது சட்டப்படி நியாயமா? முன்னாள் முதல்வர் கலைஞரை நாயை விட மோசமாக கைதின் போது நடத்தி இருக்கிறார்கள். அப்படி இந்த கைதின் போது அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பதை நீதிபதி சுரேஷ்குமார் விசாரிக்க வேண்டும். நடைமுறையில் சாதாரண மக்கள் கைது செய்யப்படும்போது மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். கலைஞர் கைது ஒரு தவறான முன்னுதாரணம்”, என்றார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/kalaignar-karunanidhi-treated-very-badly-during-arrest-time-retired-justice-chandru-710433/