24 6 23
The Purola Story: உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள புரோலாவில் இது திருமண சீசன். இந்தக் கிராமம் மாநிலத் தலைநகர் டேராடூனில் இருந்து 140 கி.மீ. தொலைவில், யமுனோத்ரி யாத்திரைப் பாதைக்கு அருகில் வருகிறது. இந்தப் பகுதியில் ஆப்பிள் போன்று இங்கு விளையும் சிவப்பு அரிசியும் பிரபலமானது.
இந்த ஊரில் மே 26ஆம் தேதி சம்பவம் ஒன்று நடந்தது. 14 வயது சிறுமியை 24 வயதான உபைத் கான், ஜிதேந்திர சைனி (23) ஆகியோர் கடத்த முயன்றனர்.
சில மணி நேரங்களில் அவர்களை போலீசார் கைதுசெய்தனர். இந்தச் செய்தி லவ் ஜிகாத் என காட்டுத் தீப் போல் பரவியது. விளைவு, அங்குள்ள 45க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களில் 14 பேர் அங்கிருந்து வெளியேறினர்.
இது தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத் முழு கடை அடைப்பு பேரணிக்கு அழைப்பு விடுத்தது. மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சிறுபான்மை நிறுவனங்களின் பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மொத்தமுள்ள 700 கடைகளில் 40 கடைகள் இஸ்லாமியர்கள் நடத்திவருகின்றனர்.
இது குறித்து முகம்மது அஷ்ரஃப், “எங்கள் வீட்டு முன்பு பேரணி சுமார் 20 நிமிடங்கள் நின்றது. அப்போது லவ் ஜிகாத் என கோஷமிட்டனர். அவர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள்” என்றார்.
தொடர்ந்து, என் தந்தை 1978ல் பிஜோரினில் இருந்து 22 வயது இளைஞராக வேலை தேடி இங்குவந்தார் என்றார். மேலும் தாம் இங்குதான் பிறந்ததாக கூறினார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் மக்கள்தொகையில் 13.9 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் மாநிலத்தின் சமவெளி பகுதிகளில் வாழ்கின்றனர்.
33,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட புரோலாவில், முஸ்லிம்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர்.
இந்த நிலையில், லவ் ஜிஹாத் பற்றி ஒருவரிடம் பத்து முறை பேசினால், பதினொன்றாவது சந்தர்ப்பத்தில் அதில் ஏதேனும் உண்மை இருக்குமோ என்று நினைக்கத் தொடங்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த வழக்கில் ஒரு முஸ்லிம், ஒரு இந்து என இருவர் குற்றம் சாட்டப்பட்டனர்.
“போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்” என்று கூறப்படும் சுற்றுலா விற்பனையாளர்களை நகரத்தில் குடியேற ஊக்குவிப்பதாக இஸ்லாமியர்கள் மீது சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆனால் சம்பவத்தைத் தொடர்ந்து, அஷ்ரஃப் தனது வீட்டில் சிசிடிவிகளை பொருத்தி, வெளியூர் செல்லும் அனைத்து பயணங்களையும் வீடியோ பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து, “ஒரு தனிமையான சாலையில் என்னைத் தாக்கினால், அவர்கள் ஒரு பெண்ணைக் கொண்டுவந்து அவளுடன் என்னைப் படம்பிடித்து, என்னை லவ் ஜிஹாத் என்று போட்டால் என்ன செய்வது?” எனக் கேட்கிறார்.
தொடர்ந்து, “இத்தனை ஆண்டுகளாக நாங்கள் இங்கு மரியாதையுடன் வாழ்ந்தோம். தற்போது மனம் உடைந்துள்ளோம்” என்றார்.
இந்த நிலையில் நாம் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும் என்றும் இந்து கடைக்காரர் ஒருவர் கூறினார்.
2 இளைஞர்கள் ஒரு பெண்
இந்த வழக்கு குறித்து காவல் நிலைய தலைவர் கஜன் சிங் கூறுகையில், “இந்த வழக்கில் முதலில் மூவரின் செல்போன் அழைப்புகளை சரிபார்த்தோம். சம்பந்தப்பட்ட சிறுமி அவர்களுடன் பேசியது இல்லை” என்றார்.
மேலும், பெண்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் வருகின்றன. அந்த வழக்குள் இஸ்லாமியர்கள் தொடர்பில்லாததால் பெருத்த கவனத்தை ஈர்க்கவில்லை” என்றார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்வதற்காக மைனர் பெண் தனது தாய்வழி அத்தை மற்றும் மாமாவுடன் ஸ்டேஷனுக்கு வந்தபோது, மே 26 அன்று சவுகான் பணியில் இருந்தார்.
அந்தச் சிறுமிக்கு பெற்றோர் இல்லை. அவரது மாமா வளர்ப்பில் உள்ளார். அவர் ஆசிரியராக பணிபுரிகிறார்.
லவ் ஜிகாத் புகார்
புரோலையில் சில வருடங்களாக புயல் உருவாகி வருகிறது. மாநிலத்தில் உள்ள மூத்த பாஜக தலைவர்கள் லவ் ஜிகாத் மற்றும் நில ஜிகாத் குறித்து தொடர்ந்து பேசுகிறார்கள்.
புரோலா சம்பவத்திற்குப் பிறகு இது அதிகரித்து காணப்படுகிறது. புரோலாவில் உள்ள விஎச்பியின் செயல் தலைவர் வீரேந்திர ராவத், மாநிலத்தில் சமீபத்தில் நடந்த ‘லவ் ஜிஹாத்’ வழக்குகள் குறித்து பேசினார்.
அப்போது, இந்தாண்டு மட்டும் 47 வழக்குகள் பதிவாகி உள்ளதாக கூறினார். இதற்கிடையில், ஜூன் 15 ஆம் தேதி மகாபஞ்சாயத்துக்கு முன்னதாக முஸ்லிம்களை உத்தரகாண்டிலிருந்து வெளியேறுமாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
புரோலா மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைவரும் இந்து சிறுமிகளுக்கு எதிராக முஸ்லீம் சிறுவர்கள் செய்யும் குற்றங்களின் செய்திகளை நினைவில் வைத்திருக்கும் அதே வேளையில், இந்து ஆண்கள் செய்யும் குற்றங்கள் அரிதாகவே விவாதிக்கப்படுகின்றன.
அதாவது இங்குள்ள பதற்றம் காரணமாக சிறுவர்-சிறுமிகள் இஸ்லாமிய சிறுவர்-சிறுமிகளுடன் பேச அச்சம் கொள்கின்றனர்.
இதற்கிடையில், 29 வயதான பள்ளி ஆசிரியர் ஆஷிஷ் பன்வார், வேலை வாய்ப்பில் கவனம் செலுத்த வேண்டும், லவ் ஜிகாத்தில் அல்ல” என்றார். மேலும் இங்கு வேலை வாய்ப்பு மோசடிகள் நடைபெறுகின்றன என்பதையும் அவர் நினைவுப்படுத்தினார்.
மாநிலங்களில் பல இடங்களைப் போலவே, புரோலாவிலும், இளைஞர்களுக்கு லவ் ஜிஹாத் தவிர வேறு கவலைகள் உள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து அதிருப்தி நிலவுகிறது.
இங்கு பெரும்பாலும் இளைஞர்கள் ராணுவத்தில் பணிபுரிகின்றனர். அவர்களை அக்னிபாத் திட்டம் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில் இளைஞர் ஒருவர் லவ் ஜிகாத் என்பது அபாயகரமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பெற்றோர் பார்க்கும் ஆண்களை, பெண்களை திருமணம் செய்துக்கொள்வது நல்லது” என்றார்.
source https://tamil.indianexpress.com/india/the-purola-story-how-an-uttarakhand-town-discovered-love-jihad-705559/