ஞாயிறு, 25 ஜூன், 2023

மத்திய அரசின் புதிய விதி வீட்டு நுகர்வோர்களை பாதிக்காது : தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்

 24 6 23 மின் கட்டணத்தில் மத்திய அரசு செய்துள்ள மாற்றத்தினால் வீட்டு நுகர்வோருக்கு பாதிபப்பில்லை என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது.

மின் கட்டணம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், மாலை நேர உச்ச காலங்களில் 20 சதவீதம் மின்கட்டணம் கூடுதலாக உயர்த்தி நிர்ணையம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த விதி தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது.

மாலை நேர உச்ச காலங்களில் 20 சதவீதம் மின்கட்டணம் கூடுதலாக உயர்த்தி நிர்ணையம் செய்ய வேண்டும் என்ற விதி வீட்டு நுகர்வோருக்கு பொருந்தாது. மின் நுகர்வோர் விதிகள் மற்றும் உரிமைகள் கடந்த 2020-ல் திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து நடைமுறையில் உள்ள 2 மின்கட்டண அமைப்பில் மாற்றம் செய்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதில் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான மின்கட்டணத்தை வசூலிப்பதை விட மின்கட்டணத்தை நாளின் நேரத்திற்கு ஏற்ப மாற்றப்படுவதே டி.ஓ.டி கட்டணமாகும்.

டி.ஓ.டி நேரம் என்பது ஒரே நாளில் எட்டு மணி நேரம் என்ற அளவில் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிடும் நேரத்தில் அமையும். இந்த மாற்றம் 2024 ஏப்ரல் ஒன்று முதல் அதிகபட்ச தேவை கொண்ட தொழில்துறை நுகர்வோர்களுக்கும், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விவசாய நுகர்வோர்கள் மற்றும் அனைத்து நுகர்வோர்களுக்கு டி.ஓ.டி கட்டணம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.  

தமிழகத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் டி.நகர் பகுதியில் இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் பல இடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் பணிகள் தொடங்கும். ஆனால் இந்த புதிய விதிகள் காரணமாக தமிழ்நாட்டு நுகர்வோர்கள் பாதிப்படைய மாட்டார்கள் எனத் தமிழக மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயிக்கப்படவில்லை. எனவே இதனால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் தமிழகத்தில் வீடுதோறும் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் திட்டம் எந்த அளவிற்கும் பாதிப்படையாது எனத் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/centeral-govt-new-law-not-affect-domestic-customers-in-tamilnadu-705612/

Related Posts: