புதன், 28 ஜூன், 2023

நாடாளுமன்ற நிதியை பயன்படுத்தாத மாநில பட்டியலில் 3ஆம் இடத்தில் தமிழ்நாடு; இத்தனை கோடிகள் வீணா?

 27 6 23

நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தாத மாநிலங்களில் இமாச்சல பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் 48.2 சதவீதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களிள் தொகுதி வளர்ச்சி நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை.

இந்தப் பட்டியலில் ஹரியானா 2ஆம் இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 41 சதவீதம் உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தவில்லை.
தொடர்ந்து, 3ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் 38.9 சதவீத உறுப்பினர்கள் தங்களின் தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவை உறுப்பினர்கள் 39 பேர், மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் 19 பேர் என மொத்தம் தமிழ்நாட்டில் 57 எம்.பி.க்கள் உள்ளனர்.
இவர்களுக்கு கடந்த நிதியாண்டில் ரூ.285 கோடி ஒதுக்கபப்ட்டது. இந்தத் தொகையில் ரூ.111 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டு உள்ளது.
ரூ.174 கோடி ரூபாய் செலவு செய்யப்படாமால் உள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வளர்ச்சி நிதியாக ரூ. 3,965 ஒதுக்கப்பட்டது. அதில், ரூ.1,578 கோடி செலவு செய்யப்படவில்லை.


source https://tamil.indianexpress.com/tamilnadu/the-list-of-states-that-do-not-use-parliamentary-funds-is-out-708440/