வியாழன், 22 ஜூன், 2023

பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை விதிகளில் மாற்றம் – அரசாணை வெளியீடு!

 22 6 23 பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.

2023-2024 ம் ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் போது 10 ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து,பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விதி 2007 திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் போது கணித பாடத்தின் மதிப்பெண் சதவீதம், இயற்பியல் பாடத்தின் மதிப்பெண் சதவீதம், விருப்ப பாடத்தின் மதிப்பெண் சதவீதம், மொத்த மதிப்பெண்களின் சதவீதம்,10 ம் வகுப்பு மதிப்பெண் சதவீதம் பிறந்த தேதி மற்றும் ரேண்டம் எண் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும்.

2021-2022 ம் கல்வியாண்டில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டது.

பொறியியல் மாணவர் சேர்க்கை காண தரவரிசை பட்டியல் தயாரிக்கும் பொழுது  engineering 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


soruce https://news7tamil.live/change-in-admission-rules-for-engineering-courses-issue-of-ordinance.html