வெள்ளி, 30 ஜூன், 2023

மணிப்பூர் மக்களுக்கு ஹீலிங் தேவை: அரசு என்னை தடுக்கிறது: ராகுல் காந்தி

 29 6 23

Manipur needs healing govt stopping me says Rahul
மணிப்பூரில் ராகுல் காந்தி

ராகுல் காந்தி காரில் இன்று மணிப்பூர் மாநிலம் சென்றார். இந்த நிலையில், பிஷ்ணுபூர் பகுதியில் அவரது வாகனத் கான்வாயை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, இன்று பிற்பகல் சுராசந்த்பூருக்கு ஹெலிகாப்டர் எடுத்துச் சென்று அங்குள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட சென்றார்.

அப்போது, பாஜக தலைமையிலான மாநில அரசைக் கடுமையாகத் தாக்கினார். மணிப்பூரின் சகோதர சகோதரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க செல்வதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளேன்.
அரசாங்கம் என்னைத் தடுப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மணிப்பூருக்கு ஆத்மார்த்தமான சிகிச்சை தேவை. அமைதி மட்டுமே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்” என ட்விட்டரில் தெரிவித்தார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்,“ராகுல் காந்தியின் கான்வாய் பிஷ்ணுபூர் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எங்களை அனுமதிக்கும் நிலையில் இல்லை என போலீசார் கூறுகின்றனர்.
ராகுல் காந்தியை நோக்கி மக்கள் சாலையின் இருபுறமும் நின்று கைகளை அசைக்கிறார்கள். எதற்காக எங்களை தடுத்தார்கள் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.


source https://tamil.indianexpress.com/india/manipur-needs-healing-govt-stopping-me-says-rahul-710391/


Related Posts: