18 6 23
திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி அண்மையில், பாரதிய ஜனதா நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து அவதூறாக, கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.
இந்த வீடியோ மற்றும் ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இது தொடர்பாக பேட்டியளித்த குஷ்பு, “திமுகவில் கருணாநிதிக்கு பிறகு கண்ணியம் இல்லை.
இவர்கள் பெண்களை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதியை அவமானப்படுத்துகின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி, திமுக கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுனர் ஆர்.என். ரவி குறித்து பேசியது கடும் எதிர்ப்பை கிளப்பியது.
தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கினர். இதன்பிறகு தனது செயலுக்கு வருத்தமும், மன்னிப்பும் கேட்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இணைந்தார்.
தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/shivaji-krishnamurthy-was-permanently-expelled-from-the-dmk-699529/