16 6 23
கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வை வர விடாமல் தடுத்துவிட்டனர் என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை கிண்டி, கிங் நிலையவளாகத்தில், ரூ.376 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை 6.03 லட்சம் சதுரடியில், 1000 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை நேற்று மாலை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார்.
இந்நிலையில் அவர் விழாவில் பேசியதாவது: “தலைவர் தலைஞர் கருணாநிதி, வாழ்க்கை வரலாறாக நெஞ்சுக்கு நீதியை எழுதினார் இது அனைவருக்கும் தெரியும். நெஞ்சுக்கு நீதி முதல் பாகம் வெளியீட்டு விழா, 1975, ஜனவரி 12ம் தேதி கலைவாணர் அரங்கில் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலைஞரின் நூலை வெளியிட அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் முகமது வருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் இப்போது நடந்ததுபோல அப்போதும் குடியரசுத் தலைவரை வர விடாமல் தடுத்துவிட்டனர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வர விடாமல் தடுத்துவிட்டனர்” என்று அவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-on-president-of-india-not-attended-kalaignar-hospital-697444/