7 6 23
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. புதிய மின் கட்டணத்தின்படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், இந்த முறை மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதியின் பேரில், ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை 4.7 சதவீதம் வரை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. மின் கட்டண உயர்வு நுகர்வோரை கடுமையாக பாதிக்கும் என்பதால், இந்த முடிவை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்தநிலையில், சென்னையில் மின் வாரிய அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் தற்போதைக்கு இருக்காது என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் வெளியிடுவார் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tneb-clarifies-no-electricity-fare-hike-in-tamil-nadu-690354/