வியாழன், 31 ஆகஸ்ட், 2023

மாநிலக் கல்விக் கொள்கை வரைவு செப்டம்பர் இறுதியில் சமர்பிக்கப்படும்!” – ஒய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தகவல்

 30 08 2023 

மாநிலக் கல்விக் கொள்கை வரைவு அடுத்த மாதம் செப்டம்பர் இறுதியில் சமர்பிக்கப்படும் என ஒய்வு பெற்ற நீதிபதியும்,  தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை குழுத் தலைவருமான முருகேசன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டிற்கு தனித்துவமான மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒய்வுப்பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்களின் பரிந்துரைகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்ட இறுதி வரைவு அறிக்கையின் மீது விவாதிக்கப்பட்டது. அதற்கு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். தமிழ்நாட்டிற்கு தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தமிழ்நாட்டிற்கான தனி கல்விக் கொள்கை தொடர்பாக பல தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிந்தது. கல்வியாளர்கள், அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டு அறிந்து உள்ளனர்.

மேலும் அறிக்கைகளை எழுத்து வடிவமாக்கும் பணியில் இக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கான கருப்பொருள்களையும் வடிவமைத்து வந்தனர். ஆனால் இந்தக்குழுவின் காலம் 2023 மே மாதம் முடிவந்த நிலையில், பணிகளை முடிப்பதற்கு செப்டம்பர் மாதம் வரையில் கால அவகாசம் கேட்டது உயர்மட்டக்குழு. அதனை ஏற்று தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கை சமர்பிக்க கால அவகாசம் வழங்கி உள்ளது.

தமிழ்நாடு மாநிலக் கல்விக்குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு தரப்பினரிடம் பெற்றக் கருத்துகளைத் தொகுத்து வந்தனர். மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும் , தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறுத் தரப்பில் இருந்தும் பெறப்பட்ட கருத்துகளை தொகுத்து பரிந்துரையாக செப்டம்பர் மாதம் அரசிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குழுவின் உறுப்பினர்களின் கருத்தை கேட்டு ஒப்புதல் பெறுவதற்கு குழுவின் தலைவரும், டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒய்வுபெற்ற நீதிபதியுமான முருகேசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு , இறுதிச்செய்யப்பட்டுள்ள வரைவு அறிக்கைகைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர்.

இது குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதியும், குழுவின் தலைவருமான முருகேசன் கூறியதாவது:

தமிழ்நாட்டிற்கான தனிக்கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பிலும் கருத்துகள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையிலும், குழுவின் உறுப்பினர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையிலும் இறுதி வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

அதனை குழுவின் உறுப்பினர்களுடன் கலந்து பேசி இறுதி செய்துள்ளோம். உறுப்பினர்கள் மேலும் கருத்துகளை கூறினால் அதனையும் சேர்க்க முடியுமா? எனவும் ஆலோசிக்க உள்ளோம்.

மேலும் வரைவு அறிக்கையை தமிழ்மாெழியிலும் மொழிப்பெயர்க்க வேண்டி உள்ளது. அந்த அறிக்கையை செப்டம்பர் இறுதி வாரத்தில் அரசிடம் சமர்பிக்க உள்ளோம். பொது மக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை உள்ளடக்கியதாக மாநிலக் கல்விக் கொள்கையின் வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒய்வு பெற்ற நீதிபதியும், குழுவின் தலைவருமான முருகேசன் கூறினார்.

source https://news7tamil.live/draft-state-education-policy-to-be-submitted-by-end-of-september-information-from-retired-justice-murugesan.html

கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருப்பது மக்களவைத் தேர்தலுக்கான அறிகுறி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 30 08 2023 

கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருப்பது மக்களவைத் தேர்தலுக்கான அறிகுறி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக வடிகால் பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, 5 இடங்களில் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள், தணிகாசலம் நகர் கால்வாயில் திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் மற்றும் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் கொளத்தூர் மண்டல உதவி ஆணையர் அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், பெட்ரோல் டீசல் விலையை குறைத்தாலும் வியப்பில்லை என கூறினார். இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

sourcehttps://news7tamil.live/gas-cylinder-price-reduction-is-a-sign-of-lok-sabha-elections-chief-minister-m-k-stalin.html

உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது!

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், 10 வருடங்களுக்கு பிறகு அவ்வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் முதலமைச்சராகவும், வருவாய் துறை அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 2012ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கியாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

கடந்த 2012ஆம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஓபிஎஸ் விடுவிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், 10 வருடங்களுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கு நாளை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகிய இருவரும் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது, நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதாக கூறி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஓபிஎஸ் மீதான வழக்கை தாமக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/10-year-old-asset-hoarding-case-against-ops-high-court-takes-up-hearing-on-its-own-initiative.html

ஜவுளித்தொழிலில் ஆர்வமுள்ளவரா நீங்கள்! இதோ உங்களுக்கான செய்தி…. ஜவுளித்தொழில் ஊக்குவிப்புப் பிரிவை தொடங்கியது தமிழ்நாடு அரசு!

 

30 08 2023 

ஜவுளித்தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு உதவும் வகையிலும், துறையில் மேலும் சாதிக்கும் வகையிலுமாக ஜவுளித்தொழில் ஊக்குவிப்புப் பிரிவை தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. 

அதன்படி, ஜவுளித்தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசு, அரசின் துணிநூல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் “ஜவுளித்தொழில் ஊக்குவிப்புப் பிரிவு” (Textile Promotion Cell) தொடங்கியுள்ளது.

ஜவுளித்துறையில் ஆர்வம் உள்ளோர் 044-45020017 / 107 / 111 மற்றும் 7904378336 / 9488722622 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த அலுவலகம் ​​முற்பகல் 10.30 மணி – பிற்பகல் 1.00 மணி வரையிலும், பிறகு 2.00 மணி – 5.30 மணி வரை செயல்படும்.

இதன் நோக்கம் ஜவுளித்துறை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம், வழிகாட்டுதல், சந்தைப்படுத்துதல், ஆராய்ச்சி என பல்வேறு உதவிகளை வழங்குவது ஆகும். மேலும் தொழில்நுட்ப ஜவுளிகள் சார்ந்த விவரம் மற்றும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இது குறித்த முழு காணொலியை கீழே காணலாம்.

source https://news7tamil.live/are-you-interested-in-textile-industry-tamilnadu-government-has-started-textile-industry-promotion-department.html

தமிழ்நாட்டில் 20 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் டோல் கட்டணம் உயர்கிறது!

 31 8 2023

தமிழ்நாட்டில் 20 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில் திண்டுக்கல், திருச்சி,சேலம் ,மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை – அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கார், வேன்,ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர பழைய கட்டணம் 85 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 125 ரூபாயிலிருந்து 135 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூபாய் 2505 இல் இருந்து 2740 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/20-toll-booths-in-tamilnadu-will-increase-toll-from-midnight-tonight.html

மும்பையில் எதிர்க்கட்சி கூட்டம்; “இந்திய” கூட்டணியின் சின்னம், கொள்கை முழக்கம் வெளியிட திட்டம்… தலைமை ஏற்கிறதா திமுக ?

 31 08 2023 

எதிர்க்கட்சிகளின் 3-வது கூட்டம் மும்பையில் இன்று கூட உள்ள நிலையில், கூட்டத்தில் என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்பது குறித்து இன்றைய சொல் தெரிந்த சொல் பகுதியில் பார்க்கலாம்.

இந்தியா” கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. நாளையும்  நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் “இந்தியா” கூட்டணியின் சின்னம் மற்றும் கொள்கை முழக்கம் வெளியிடப்பட இருக்கு.

இதுவரை இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாநிலங்களில் கூடி ஆலோசனை நடத்தி வந்த எதிர்க்கட்சிகள், தற்போது ஆளும் பாஜக மாநிலமான, மகராஷ்ரா தலைநகர் மும்பையில் கூடி ஆசோசனை நடத்த உள்ளது.

மத்தியில் 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க தேசிய ஜனநாயக கூட்டணியும், மறுபுறம் இந்திய கூட்டணி என இருபெரும் கூட்டணிகள் தீவிரம் காட்டி வந்தாலும், இதில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மீது பலரது கவனம் குவிந்து இருக்குனே சொல்லலாம். ஏனெனில் இந்த கூட்டணியில் பல முக்கிய மாநில கட்சிகள், இருப்பது தான் கூடுதல் முக்கியத்துவம் பெற்று இருக்கு.

அதுமட்டுமின்றி இந்த ஆலோசனை கூட்டத்தில், வரவிருக்கும் 5 மாநில தேர்தல்கள் குறித்தும், கூட்டணியின் கொள்கை என்ன? பிரதமர் வேட்பாளர் பெயர் பரிந்துரை, தொகுதி பங்கீடு, பிரச்சார வியூகம், தேர்தல் அறிக்கை மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டம் என பல்வேறு விஷயங்கள் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது 38 கட்சிகள் இருக்கும் நிலையில், ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால், 4 லிருந்து, 5 கட்சிகள் இந்திய கூட்டணிக்கு தாவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் மிக முக்கியமாக இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் எனவும் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கு.

ஒருபுறம் இந்திய கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற கருத்தும் நிலவிவருகிறது. ஆனால் மற்றொருபுறம் அதிக எம்பிகள் கொண்ட கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

அப்படி பார்த்தோம் என்றால், மக்களவையில் காங்கிரஸுக்கு 52 எம்பிகளும், திமுகவுக்கு 24 எம்பிகளும், திரிணாமுல் காங்கிரஸுக்கு 22 எம்பிகளும், நிதிஷ்குமாரின் JDU-வுக்கு 16 எம்பிகளும் உள்ளனர். இதனால் “இந்தியா” கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு திமுகவுக்கு அதாவது தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்படலாம் எனவும், ஒருவேளை திமுக இப்பொறுப்பை நிராகரித்தால் அடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸுக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, ஐக்கிய முன்னணி மற்றும் தேசிய முன்னணி என எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்டமான கூட்டணியை உருவாக்குவதில் மிக முக்கியமான பங்களிப்பு வகித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இடம்பெற்ற போது குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, கடும் இந்துத்துவா போக்கை செயல்படுத்தாத வகையில் பார்த்துக் கொண்டதும் கருணாநிதிதான்.

அந்தவகையில் தற்போது மீண்டும் திமுகவை நோக்கி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு வருவதாக கூறப்படுகிறது. இதனை திமுக தலைமை ஏற்குமா? நிராகரிக்குமா? என்பது இந்த கூட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும்.

source https://news7tamil.live/opposition-meeting-in-mumbai-the-plan-to-publish-the-symbol-and-slogan-of-the-india-alliance-is-dmk-taking-the-lead.html

விரைவில் இதுவும் விலை குறையும்: ப.சிதம்பரம் ட்வீட்

 30 08 2023

P Chidambaram on cooking gas price reduction
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ.200 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் ரூ.200 கூடுதல் மானியத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இதைத் தொடர்ந்து, பயனாளிகள் இப்போது மொத்தம் ரூ.400 குறைவாக சிலிண்டரை பெறலாம்.

இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில், “விரைவில் பெட்ரோல் விலையும் குறையலாம்” எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி? சமையல் காஸ் விலையை ரூ200 குறைத்திருப்பதே அறிகுறி!

ரூ1100 க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்! வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “சமையல் எரிவாயு விலை அனைத்து நுகர்வோருக்கும் ரூ.200 குறைக்கப்படும் என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய சமையல் எரிவாயு இணைப்புகளையும் அரசாங்கம் இலவசமாக வழங்கும்” எனத் தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/p-chidambaram-on-cooking-gas-price-reduction-746157/

ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் சொல்லி அடித்த காங்கிரஸ்: குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரம்: தொடங்கிவைத்த ராகுல் காந்தி

 Cong to replicate Karnatakas Gruha Lakhmi cash transfer scheme for women across India Rahul Gandhi

கர்நாடக மாநிலம் மைசூருவில் க்ரஹ லட்சுமி திட்டம் ராகுல் காந்தியால் தொடங்கிவைக்கப்பட்டது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் க்ரஹ லட்சுமி திட்டம் நாடு முழுவதும் பின்பற்றப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை அறிவித்தார்.
மைசூருவில் கர்நாடக அரசின் இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், இந்த திட்டம் பெண்களுக்கான பாதுகாப்பு வலையாக அமையும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கர்நாடகாவில் எங்களின் ஐந்து திட்டங்களும் வெறும் திட்டங்கள் அல்ல; அது ஒரு ஆட்சி மாதிரி. ஏழை மற்றும் நலிந்தவர்களுக்காக அரசு பாடுபட வேண்டும்.
மதம், ஜாதி, மொழி வேறுபாடின்றி யாரும் பின்தங்கி விடக்கூடாது என்பதே நமது சிந்தனை. கர்நாடகாவில் பெண்களுக்கு என்ன செய்தோமோ, அதை நாடு முழுவதும் பிரதிபலிக்க உள்ளோம். மேலும் நாட்டிற்கு கர்நாடகம் வழி காட்டுகிறது” என்றார்.

தொடர்ந்து, “உலகில் எங்கும் பெண்களுக்கு அரசாங்கம் இவ்வளவு பெரிய தொகையை வழங்கவில்லை,” என்றார். இதையடுத்து, “காங்கிரஸ் இந்தத் திட்டத்தை அறிவித்தபோது, அதைச் செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசு கூறியது. ஆனால் உண்மை உங்கள் முன்னால் உள்ளது.
இன்று ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களின் கணக்குகளுக்கு 2000 ரூபாய் கிடைத்துள்ளது. பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கிறார்கள். குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி கிடைக்கிறது” என்றார்.

கர்நாடகத்தில் காங்கிரஸின் 5 உத்தரவாதங்களில் ஒன்றான இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நான்காவது திட்டமாகும். இதில், 1.15 கோடி பயனாளிகள் உள்ளனர்.
ஏற்கனவே பெண்களுக்கு சக்தி இலவச பேருந்துப் பயணம், அன்ன பாக்யா – பிபிஎல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் 10 கிலோ அரிசி மற்றும் ஒவ்வொரு மாதமும் வீடுகளுக்கு 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம், முன்பு தொடங்கப்பட்டுவிட்டன.

ஐந்தாவது திட்டமான யுவ நிதி இளைஞர்களுக்கு வேலையில்லா உதவித்தொகை வழங்கும் திட்டம் டிசம்பர் அல்லது ஜனவரியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/india/cong-to-replicate-karnatakas-gruha-lakhmi-cash-transfer-scheme-for-women-across-india-rahul-gandhi-746106/

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையினர் போராட்டம்; வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்; பின்னணி என்ன?

 Tamil Nadu Revenue Department staffs protest, Revenue Department staffs to condemns to suspends Tahsildar of Kallakurichi, தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையினர் போராட்டம், வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள், வருவாய்த்துறையினர் போராட்டம் பின்னணி என்ன?, Revenue Dept. staffs protest to condemns to suspends Tahsildar

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையினர் போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இவற்றை நீதிமன்றம் உத்தரவுபடி கடந்த 9-ம் தேதி கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

அப்போது, அங்கே பட்டா நிலத்தில் கட்டப்பட்ட 3 வீடுகளின் முன்பகுதி சுவர் அரசு புறம்போக்கு இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், அந்த வீடுகளின் முன்பகுதி சுவர்களை அகற்றியபோது, அந்த வீடுகளின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், பட்டா நிலத்தில் உள்ள வீட்டை சேதப்படுத்திய வருவாய்த்துறை அதிகாாிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு, தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், பணி இட நீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்து அவருக்கு அதே இடத்தில் பணி வழங்கக் கோரியும் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அங்கே வந்து காத்திருப்பு போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல கேட்டுக்கொண்டார். போராட்டக்காரர்கள் சம்மதிக்காதால் காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு வருவாய் துறை சங்கத்தினர் அனைவரையும் கைது செய்து கள்ளக்குறிச்சி தனியார் மண்டபத்தில் வைத்தனர். இதனால், கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தனி வட்டாட்சியர் மனோஜ் முனியனை, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறையினர் பணிகளைப் புறக்கணித்து புதன்கிழமை (ஆகஸ்ட் 30) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/revenue-dept-staffs-protest-to-condemns-to-suspends-tahsildar-746220/

மும்பை கூட்டத்தில் தொகுதி பங்கீடு, குழு கட்டமைப்பு: காத்திருக்கும் ஐ.என்.டி.ஐ.ஏ. தலைவர்கள்!

 Seat-sharing may wait INDIA to put in place groups structure at Mumbai meeting

லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

பாட்னா, பெங்களூருவை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி கட்சியினர் மும்பையில் இன்றும் (ஆக.31) நாளையும் (செப்.1) சந்திக்கிறார்கள். இதில் 28 கட்சிகளின் தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.
இதில் பாரதிய ஜனதா எதிர்ப்பு முன்னிலைப்படுத்தப்படும். மேலும் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணிக்கு ஒரு லோகோ மற்றும் ஒருங்கிணைப்பாளர் நியமனம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இதில் ஒருங்கிணைப்பாளர் பதவி சர்ச்சைக்குரிய வகையில் மாறியுள்ளது. ஏனெனில் கூட்டணியில் பல்வேறு முக்கிய மாநிலத் தலைவர்கள் காணப்படுகிறார்கள்.
எனவே இதில் ஒருவரை தலைவராக தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இடப்பகிர்வு குறித்து பேசப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஒருங்கிணைப்பு குழுவும், பரப்புரை நிர்வாக விவரங்களும் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த தலைவர் ஒருவர், “நாம் ஒரு கட்டமைப்பையும் கட்டிடக்கலையையும் வைக்க வேண்டிய நேரம் இது. கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய இடத்தில் கூடி இருக்க முடியாது” என்றார்.

இதற்கிடையில் எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்களுக்கு உத்தவ் தாக்கரே இரவு விருது வழங்குகிறார். இது காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை தீர்க்க வாய்ப்பாக அமையும் என்று நம்பப்படுகிறது.

மறுபுறம், எதிர்க்கட்சி தலைவர் சரத் பவாரிடமிருந்து வரும் கலவையான செய்திகள் பல தலைவர்களையும் கலக்கமடையச் செய்கின்றன.
கூட்டத்தின் முன் மிகவும் கடினமான பிரச்சினையான இடப் பங்கீட்டைப் பொறுத்தவரை, தலைவர்கள் அதை மீண்டும் தவிர்க்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் புதன்கிழமை (ஆக.30) செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார், “நாங்கள் இன்னும் சீட் பங்கீடு பற்றி விவாதிக்கத் தொடங்கவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கைகள் (இருக்கைப் பகிர்வு குறித்து) விவாதிக்கப்படும். அது நடந்தால், அதற்கான பொறுப்பு சிலருக்கு வழங்கப்படும்” என்றார்.

அப்போது, உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா, மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல், மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக். சவான் மற்றும் என்சிபி மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் உடனிருந்தனர்.

தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் 28 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 63 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று பவார் அறிவித்தார். பெங்களூரு கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொண்டன.
அந்த வகையில் மும்பை கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி இதில் இணையும் எனத் தெரியவருகிறது.

மறுபுறம் ஒருங்கிணைப்பாளர் குறித்த கேள்விக்கு உத்தவ் தாக்கரே, “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ.) ஒருங்கிணைப்பாளர் யார் என்று யாருக்காவது தெரியுமா?” எனக் கேள்வியெழுப்பினார்.

மேலும், பிரதமர் தொடர்பான கேள்விக்கு, “நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதில் எங்களுக்கு பல தேர்வுகள் உள்ளன” என்றார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்கட்சியின் பிரதமர் வேட்பாளராக ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் முன்மொழிந்ததையடுத்து, இந்த விவகாரம் புதன்கிழமை சில படபடப்பை உருவாக்கியது.

தொடர்ந்து, அகாலிதளம் அல்லது ஏஐஎம்ஐஎம் போன்ற கட்சிகள் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி உடன் இணைய முடியுமா என்ற கேள்விக்கு, அவர்களில் சிலருடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அவர்களை சேர்க்கும் முடிவுக்கு முன்னணியில் உள்ள மற்றவர்களின் ஒப்புதல் தேவை என்றும் பவார் கூறினார்.

மாயாவதி தொடர்பான கேள்விக்கு சரத் பவார், “அவர் பாஜக உடன் உறவாடி வருகிறார் எனக் கூறப்படுகிறது. அவர்தான் தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்” என்றார்.

மேலும், கட்சிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து, என்சிபி தலைவர் பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை உருவாக்குவது குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில் எதிர்க்கட்சிகளின் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி என்பதற்கு பதிலாக பாரத் மாதா காவலர்கள் என அழைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, கியாஸ் சிலிண்டர்கள் விலை குறைப்பு பற்றி பேசிய அவர், “கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் தங்களின் சகோதரிகளை மறந்துவிட்டார். தேர்தலுக்கு முன்புதான் அவருக்கு நியாபகம வந்துள்ளது” என்றார்.

முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் கூறுகையில், ரக்ஷா பந்தன் அன்று ஒரு சகோதரன் தன் சகோதரியை பார்த்துக் கொள்வதாக சபதம் செய்வது போல, பாரத மாதாவை பாதுகாப்பதாக ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி சபதம் செய்கிறது” என்கிறார்.


source https://tamil.indianexpress.com/india/seat-sharing-may-wait-india-to-put-in-place-groups-structure-at-mumbai-meeting-746344/

புதன், 30 ஆகஸ்ட், 2023

இந்திய சூழலும் இஸ்லாமியர்களின் பொறுப்பும்

இந்திய சூழலும் இஸ்லாமியர்களின் பொறுப்பும் E. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர்,TNTJ) நாகப்பட்டினம் மாவட்டம் - நாகை நகர கிளை

ஸஃபர் மாதத்தை சபிக்காதே! அல்லாஹ்வை ஏசாதே!

ஸஃபர் மாதத்தை சபிக்காதே! அல்லாஹ்வை ஏசாதே! எஸ்.ஹஃபீஸ் எம்.ஐ.எஸ்.ஸி (TNTJ,பேச்சாளர்) தலைமையக ஜுமுஆ - இரண்டாம் உரை (25.08.2023)

இம்மை மறுமை வாழ்வை நாசமாக்கும் கடன்!!

இம்மை மறுமை வாழ்வை நாசமாக்கும் கடன்!! எஸ்.ஹஃபீஸ் எம்.ஐ.எஸ்.ஸி (TNTJ,பேச்சாளர்) தலைமையக ஜுமுஆ - 25.08.2023

பாதுகாப்பும் பொறுப்பும்!

பாதுகாப்பும் பொறுப்பும்! செங்கோட்டை N.ஃபைசல் (மாநிலச் செயலாளர்,TNTJ) தாராபுரம் - திருப்பூர் மாவட்டம் பொதுக்கூட்டம் - 25.06.2023

வெறுப்பின் உச்சத்தால் உருக்குலையும் இந்தியா!

வெறுப்பின் உச்சத்தால் உருக்குலையும் இந்தியா! ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி - மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ பொதுக்கூட்டம் - 26.08.2023 பண்டாரவாடை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம்

சமுதாயமே விழித்துக்கொள்!

சமுதாயமே விழித்துக்கொள்! ஐ.அன்சாரி மாநிலச் செயலாளர், TNTJ தர்பியா - 23.07.2023 செங்கை மேற்கு மாவட்டம்

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 23.08.2023

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 23.08.2023 பதிலளிப்பவர்: F. அர்ஷத் அலி M.I.Sc பேச்சாளர், TNTJ 1, இரண்டு சகோதரர்கள் சந்தித்து பிரியும் போது கை கொடுப்பது மார்க்கத்தில் இல்லாத வழிமுறையா? 2, கடும் குளிர் நரகத்தின் மூச்சுக்காற்று என்று ஹதீஸ் உள்ளது ஆனால் நரகமோ நெருப்பு, குளிர்காலத்தில குளிரை உணர்வது குறித்து விளக்கவும் 3, ஈ யினால் சொர்க்கம் சென்றவர்கள் உண்டு நரகம் சென்றவர்கள் உண்டு என்ற ஹதீஸின் நிலை என்ன? 4, கடமையாவதற்கு முன் ஸகாத் கொடுப்பதற்கும், இந்த ஆண்டின் ஸகாத்தை முந்தைய ஆண்டே அப்பாஸ்(ரலி) அவர்களிடம் வாங்கியதாக உள்ள ஹதீஸ் ஸஹீஹ் என்றும் மாற்று தரப்பினரால் கூறப்படுகிறது - விளக்கவும் 5, (7:172) வசனத்தின் மொழிப்பெயர்ப்பு மற்றும் விளக்கம் தொடர்பாக சில கேள்விகள் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் வழித்தோன்றல்களை வெளிப்படுத்தியது இந்த செய்தியை அடிப்படையாக வைத்து (ஆலமுல் அர்வாஹ் - உயிர்களின் உலகம் ) என்று ஒரு உலகம் இருப்பதாகவும்..., அனைத்து மனிதர்களும் அங்கு படைக்கப்பட்டு பிறகு தான் அவர்களின் தவனையின் போது கருவறையில் செலுத்தப்படுவ தாகவும்..." சிலர் கூறுகிறார்கள் விளக்கம் தரவும்? 6, இகாமத்தே தீன் என்று தற்போதைய விவாதத்திற்கு தாங்களின் பதில் என்ன? 7, திருக்குர்ஆனை ஓதி அதன் அடிப்படையில் நடக்காதவர்களுக்கு தலை நசுக்கப்படும் தண்டனை என்றால் குர்ஆனை ஓதாதவருக்கு என்ன தண்டனை?

நான்கு இமாம்களை மட்டும் ஏன் பின்பற்றி தொழுகிறார்கள்?

நான்கு இமாம்களை மட்டும் ஏன் பின்பற்றி தொழுகிறார்கள்? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 11.012.2022 பதிலளிப்பவர்: சி.வி. இம்ரான் - மாநிலச் செயலாளர், TNTJ வேலூர் மாவட்டம் - சைதாபேட்டை கிளை

யஃஜூஜ் மஃஜூஜ் என்பவர்கள் யார்? அவர்கள் யார் காலத்தில் வாழ்ந்தார்கள்? அவர்களை அடைத்து வைத்தது யார்?

யஃஜூஜ் மஃஜூஜ் என்பவர்கள் யார்? அவர்கள் யார் காலத்தில் வாழ்ந்தார்கள்? அவர்களை அடைத்து வைத்தது யார்? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 11.012.2022 பதிலளிப்பவர்: சி.வி. இம்ரான் - மாநிலச் செயலாளர், TNTJ வேலூர் மாவட்டம் - சைதாபேட்டை கிளை

நம் வாழ்நாளில் நாம் விட்டுவிட்ட தொழுகைகளை களா தொழுகைகளாக தொழலாமா

நம் வாழ்நாளில் நாம் விட்டுவிட்ட தொழுகைகளை களா தொழுகைகளாக தொழலாமா இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 11.012.2022 பதிலளிப்பவர்: சி.வி. இம்ரான் - மாநிலச் செயலாளர், TNTJ வேலூர் மாவட்டம் - சைதாபேட்டை கிளை

பேய் பிசாசுகளை நம்புகிறார்களே இஸ்லாத்தில் இவர்களுக்கான அறிவுரை என்ன?

பேய் பிசாசுகளை நம்புகிறார்களே இஸ்லாத்தில் இவர்களுக்கான அறிவுரை என்ன? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 11.012.2022 பதிலளிப்பவர்: சி.வி. இம்ரான் - மாநிலச் செயலாளர், TNTJ வேலூர் மாவட்டம் - சைதாபேட்டை கிளை

லைஃப் இன்சூரன்ஸ் மெடிக்கல் இன்சூரன்ஸ் வாங்கலாமா?

லைஃப் இன்சூரன்ஸ் மெடிக்கல் இன்சூரன்ஸ் வாங்கலாமா? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 11.012.2022 பதிலளிப்பவர்: சி.வி. இம்ரான் - மாநிலச் செயலாளர், TNTJ வேலூர் மாவட்டம் - சைதாபேட்டை கிளை

போலி பல்கலைக்கழகங்களும் தரமற்ற பொறியியல் கல்லூரிகளும்! மாணவர்களே உஷார்!!

போலி பல்கலைக்கழகங்களும் தரமற்ற பொறியியல் கல்லூரிகளும்! மாணவர்களே உஷார்!! எஸ்.ஷமீம் M.Sc கல்விச் சிந்தனைகள் - 23.08.2023

சந்திராயனும் சங்கிகளின் கூத்தும்

சந்திராயனும் சங்கிகளின் கூத்தும் N. பைசல் - மாநிலச் செயலாளர், TNTJ செய்தியும் சிந்தனையும் - 29.08.2023

சந்திரயான் -3 நமது பார்வை

சந்திரயான் -3 நமது பார்வை E. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர்,TNTJ) செய்தியும் சிந்தனையும் - 25.08.2023

Credit : TNTJ