திங்கள், 7 ஆகஸ்ட், 2023

ஏன் தயக்கம்? அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்தாலும் அவர் எம்.பி.யாக தொடர்வதில் என்ன சிக்கல்?

 Stalins tweet in support of Rahul Gandhi

ராகுல் காந்தியுடன் மு.க ஸ்டாலின்

மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார்.
இதையடுத்து சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி மாநில உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

அங்கும் தீர்ப்புக்கு தடை விதிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் எனக் கோரினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவாய் அமர்வு ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்தது.

எனினும் அவர் பாராளுமன்ற உறுப்பினராக செயல்படுவதில் சிக்கல் நிலவுகிறது. இது தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ட்விட்டரில், “ஏன் தயக்கம்? அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்தாலும் அவர் எம்.பி.யாக தொடர்வதில் என்ன சிக்கல்?

அவரை தகுதி நீக்கம் செய்ய காட்டிய அவசரத்தை பதவியை வழங்குவதில் ஏன் காட்டவில்லை. ராகுல் காந்தியை பார்த்து பாராளுமன்றத்தில் பாஜக பயப்படுகிறா? எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.


மு.க. ஸ்டாலின் ட்வீட்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-cm-m-k-stalin-questioned-if-bjp-is-afraid-of-rahul-gandhi-735656/

Related Posts: