மணிப்பூர் கலவரம் இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அம்மாநில விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இரு தரப்பினர்களிடையே பெரும் மோதல் வெடித்து வரும் நிலையில், நூற்றுக்கணக்காக மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், ஆளும் கட்சி குறித்து பல்வேறு விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் மணிப்பூர் விவாகரம் தொடர்பான நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கூறி எதிர்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் இந்திய அளவில் மணிப்பூர் கலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்ய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் பயிற்சியில் ஈடுபட தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று விளையாட்டு வீரர்கள் தற்போது தமிழகத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்,
கடினமான சூழலுக்கு இடையே, மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் துவளாமல் மீண்டுள்ளது நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மணிப்பூர் வீரர்கள் தமிழ்நாட்டில் பயிற்சியைத் தொடங்குவதை கண்டு, நமது நெஞ்சங்கள் பெருமிதத்தில் பொங்குகிறது. மணிப்பூரில் இருந்து வந்த 15 வீரர்களும், 2 பயிற்சியாளர்களும் தங்கள் விளையாட்டு குடும்பத்தின் ஒரு அங்கமாக உள்ளனர். இது எல்லைகளுக்கு அப்பால் பிணைப்புகளை வலிப்படுத்துவதாக உள்ளது. நாம் ஒன்றிணைந்து இந்தியாவின் ஒற்றுமை உணர்வைத் தழுவிக்கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-mk-stalin-proudly-twitter-post-about-manipur-sports-persons-740960/