புதன், 2 ஆகஸ்ட், 2023

மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஓபிசி பிரிவை சேர்ந்த பேராசிரியர்கள் எத்தனை சதவீதம் பேர் பணிபுரிகின்றனர் தெரியுமா

 

மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஓபிசி பிரிவை சேர்ந்த பேராசிரியர்கள் எத்தனை சதவீதம் பேர் பணிபுரிகின்றனர் தெரியுமா?

45 மத்தியப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களில் 4 விழுக்காட்டினர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்தவர்கள் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஆந்திராவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சஞ்சிவ் குமார், மத்திய பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்களின் எண்ணிக்கையை பிரிவு வாரியாக தெரிவிக்குமாறு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்கர் அளித்த பதில்களாவது:

45 மத்தியப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களில் 4 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்தவர்கள்

இந்தியா முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் 1,341 பேராசிரியர்களில் 60 பேர், அதாவது 4 விழுக்காட்டினர் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்;

2817 இணைப் பேராசிரியர்களில் 187 பேர், அதாவது 6 விழுக்காட்டினர் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்

பட்டியலினத்தவருக்கான பிரதிநிதித்துவமும் 10 விழுக்காட்டைத் தாண்டவில்லை; பழங்குடியினர் பிரதிநிதித்துவமும் 5 விழுக்காட்டைத் தாண்டவில்லை. அதே நேரத்தில் உயர்வகுப்பினர் நிரம்பியுள்ள பொதுப்பிரிவினரின் பிரதிநிதித்துவம் பேராசிரியர் பணியிடங்களில் 85 விழுக்காடாகவும், இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 82 விழுக்காடாகவும் உள்ளது.

இந்த தகவல்கள் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்கர் அளித்த பதில்களில் இருந்து தெரியவந்துள்ளது.

source https://news7tamil.live/do-you-know-what-percentage-of-professors-from-obc-category-are-working-in-central-universities.html