புதன், 2 ஆகஸ்ட், 2023

மணிப்பூர் வன்முறைக்கு எதிராக மே.வங்கத்தில் தீர்மானம்: பிரதமர் பதிலளிக்க மம்தா பானர்ஜி கோரிக்கை

 1 8 23

Kolkata Assembly passes resolution condemning violence in Manipur Mamata demands PM statement
மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி

மணிப்பூர் வன்முறை சம்பவத்துக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம், “அரசியல் ரீதியிலானது, சட்டத்துக்கு புறம்பானது” என பாரதிய ஜனதா விமர்சித்துள்ளது.
முன்னதாக இந்தத் தீர்மானத்தை அமைச்சர் சோவந்தேப் சட்டோபாத்யாய் விதி 185ன் கீழ் சட்டப்பேரவையில் கொண்டுவந்தார்.

அப்போது மணிப்பூரில் நடந்த நிகழ்வுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளது.
தீர்மானத்தின் நிறைவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி சுமார் 1 மணி நேரம் உரையாற்றினார். அப்போது, “இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் மணிப்பூரில் நிகழ்ந்தது, “மனித நேயத்துக்கு எதிரானது, மனித குலத்துக்கு எதிரானது, இந்திய நாட்டுக்கு எதிரானது” என்று கூறினார்.
இந்தத் தீர்மானது பாரதிய ஜனதா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இது இடத்துக்கு இடம் நிறம் மாறும் பச்சோந்தி போன்றது எனத் தெரிவித்தனர்.


source https://tamil.indianexpress.com/india/kolkata-assembly-passes-resolution-condemning-violence-in-manipur-mamata-demands-pm-statement-733517/