துருக்கி
ஐரோப்பாவுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும், மத்திய ஆசியாவுக்கும் மிக அருகில் இருக்கும் நாடு. அங்கிருந்து இந்த நாடுகளுக்கு செல்வது எளிது, டிக்கெட் விலையும் மலிவு.
இங்கு வாழ்க்கைதரம் ஐரோப்பிய நாடுகளுக்கு சமமாக இருக்கும். விலைவாசியும் குறைவு. முக்கியமாக துருக்கிய குடியுரிமை இருந்தால் பல்கலைகழக கட்டணங்கள் மிகக் குறைவு. ஆண்டுக்கு ஆயிரம் யூரோவுக்கு (90 ஆயிரம் ரூபாய்) குறைவான கட்டணத்தில் டிகிரி பெறலாம். இங்கு குடிமக்களுக்கு தரமான அரசு மருத்துவ சிகிச்சை இலவசம்.
துருக்கி குடியுரிமை பெற விரும்புகிறீர்களா?
3.2 கோடி இந்திய ரூபாய் முதலீட்டில் அங்கே எதாவது ரியல் எஸ்டேட் வாங்கினால் (வீடு, நிலம், பண்ணை, வணிகவளாகம்) துருக்கிய குடியுரிமை கிடைக்கும். துருக்கிய பாஸ்போர்ட்டை வைத்து 113 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம்.
உணவுகள் பிரமாதமாக இருக்கும். ஓசிஐ கார்டு (இந்தியாவின் கவுரவ குடிமகன் கார்டு) பெற்றுக்கொண்டு இந்தியாவுக்கு விரும்பும் போது வரலாம், போகலாம், தங்கலாம், தொழில் செய்யலாம். அமெரிக்காவில் தொழில் துவங்க இரு ஆண்டு விசா எளிதில் கிடைக்கும். குடியுரிமை பெற்று மூன்று ஆண்டுகள் கழித்து ரியல் எஸ்டேட்டை விற்றுவிடலாம்.
அப்புறம் என்ன? புறப்பட வேண்டியதுதானே..!
என். எம். இக்பால்,கன்னியாகுமரி
source https://tamil.indianexpress.com/lifestyle/turkey-citizenship-by-investment-turkey-citizenship-for-indian