புதன், 27 செப்டம்பர், 2023

சென்னை புறநகரில் தீம்பார்க்: தமிழ்நாடு அரசு முடிவு

 26 09 2023

CM MK Stalin

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (செப்.26) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை  2023-ஐ வெளியிட்டார். 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (செப்.26) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை  2023-ஐ வெளியிட்டார். 

அதில், சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்கப்படும் என்றும் வரும் 5 ஆண்டுகளில் இந்த தீம் பார்க் தனியார் உதவியுடன் கட்டமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டப் பணிகள் ஏ, பி, சி எனப் பிரிக்கப்பட்டு ஊக்கத் தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதில், பொழுதுபோக்கு பூங்காக்கள், பாரம்பரிய ஹோட்டல்கள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள்/ முகாம்கள், ரோப்வேகன்கள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், ஓசியானேரியம் / மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம் / பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம், குரூஸ் சுற்றுலா திட்டம் மற்றும் கேரவன் சுற்றுலா திட்டம் என 13 சுற்றுலா திட்டங்கள் உள்ளன.

தொடர்ந்து, அனைத்து தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கும் ஒற்றை சாளர அனுமதியுடன் கூடிய நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


source https://tamil.indianexpress.com/tamilnadu/a-theme-park-is-set-up-in-chennai-1384731