சனி, 23 செப்டம்பர், 2023

அதன் ஒரு பகுதியாக ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் புதிய மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஜெய்பூர் சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சி மாநில பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவா, மாநில தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் திறந்து வைக்கும் ராகுல் காந்தி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.

 

மகளிர் இடஒதுக்கீடு வரும், ஆனால் வராது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலபாரதி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள பொன்விழா மைதானத்தில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி கலந்து கொண்டு பேசினார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக அரசு தற்போது கையில் எடுத்திருந்தாலும் இது 2029-ம் ஆண்டு தான் முழுமையாக நிறைவேறும். இந்த திட்டம் வரும் ஆனால் வராது. இந்த திட்டமானது பஞ்சு மூட்டை போன்றது. குடோனிலேயே இருந்திருக்கலாம். இந்த மசோதாவுக்கு பின்னர் பாஜகவின் குரோத அரசியல் உள்ளது.

விலைவாசி அதிகமாக உள்ளது. நிலவுக்கு அனுப்பிய சந்திராயனை செவ்வாய், வியாழன் கிரகத்திற்கு அனுப்பினால் விண்கலத்திற்கு முன்பாக விலைவாசி அங்கு நிற்கும்.
துவாரகா சாலை திட்டத்தில் கிலோ மீட்டர் ஒன்றுக்கு ரூ. 250 கோடி கணக்கு காட்டி உள்ளனர். ஏனென்றால் அந்த சாலையில் தங்கம், வைரம், நவரத்தினங்களை கரைத்து ஊற்றி உள்ளனரா என பாலபாரதி கேள்வி எழுப்பினார்.


source https://news7tamil.live/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%92%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d.html