26 09 2023
தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெறும் நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 23-ந் தேதி மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் முழு அடைப்பு நடைபெற்றது.
இந்த நிலையில் பெங்களூருவில் இனறு முழு அடைபுக்கு கர்நாடக நீர் பாதுகாப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெறுகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வரும் 29-ம் தேதி கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே கர்நாடகாவிற்கு இன்று லாரிகளை இயக்க வேண்டாம் என்றும், வடமாநிலம் சென்று திரும்பும் லாரிகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்குமாறு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளது.
source https://news7tamil.live/tami%e1%b8%bbna%e1%b9%ad%e1%b9%adi%e1%b9%9fku-nir-ti%e1%b9%9fakka-etirppu-pe%e1%b9%85ka%e1%b8%b7uruvil-i%e1%b9%89%e1%b9%9fu-mu%e1%b8%bbu-a%e1%b9%adaippu-tami%e1%b8%bbna%e1%b9%ad%e1%b9%adi%e1%b9%9fku.html