வெள்ளி, 15 செப்டம்பர், 2023

பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் -அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய தலைமை செயலாளர்

 

15 9 23

பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தி உள்ளார்.

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தி உள்ளார்.

பலவீனமான மற்றும் சேதமடைந்த பொதுக் கட்டடங்களை கண்டறிந்து இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.அறுந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பிகளை அகற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பேரிடர் காலத்தின்போது பயன்படுத்தப்படும் உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்

source https://news7tamil.live/precautionary-measures-to-face-the-effects-of-monsoon-are-serious-the-chief-secretary-instructed-the-officials.html

Related Posts: