செவ்வாய், 26 செப்டம்பர், 2023

கூட்டணி முறிவு: புதுவையில் கழக தொண்டர்கள் கொண்டாட்டம்

 25 09 2023 அதிமுக பாஜக கூட்டணி முறித்துக் கொள்ளப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.

இதையடுத்து, புதுச்சேரி முத்தியால்பேட்டை காந்தி வீதி திருக்குறள் மணிக்கூண்டு அருகே இன்று (திங்கள்கிழமை) மாலை 6.30 மணியளவில் அதிமுக மாநில துணை செயலாளர் முன்னாள் எம்.எல்..ஏ வையாபுரி மணிகண்டன் தலைமையில் பட்டாசு வெடித்தும், கழக தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை சி.என். அண்ணாத்துரை விஷயத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அதற்கு அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனால் அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்



source https://tamil.indianexpress.com/india/puducherry-aiadmk-celebrated-breaking-alliance-with-bjp-by-bursting-firecrackers-1383265