செவ்வாய், 19 செப்டம்பர், 2023

சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் அது தவறு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி..!

 

18 9 23

தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான். சாதியை ஒழிக்கத்தான் நாங்கள் போராடி வருகிறோம் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சார்பில் சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான
ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்திற்கு கருத்துக்கணிப்பு துவங்கியது. இந்த
நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின், மற்றும் வீட்டு வசதி மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர்
கலந்துகொண்டனர்.  அமைச்சர் உதயநிதி அங்கிருந்து பொதுமக்களிடம் கருத்து கணிப்புக்கான துண்டு பிரச்சாரம் வழங்கினார்

இதன் பின்னர் செய்தியாளர் சந்தித்த  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..

தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான். சாதியை ஒழிக்கத்தான் நாங்கள் போராடி வருகிறோம்.  அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.

சனாதானத்தை எதிர்க்க தொடர்ந்து குரல் கொடுப்பேன். அதேபோல சமத்துவம் வேண்டி திமுக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்தை உருவாக்கும் வகையில் பொதுமக்கள் தயக்கம் காட்டாது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில், அடுத்த 25 ஆண்டுகளில் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் எனக்  என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/caste-untouchability-is-wrong-wherever-it-happens-minister-udayanidhi-stalin-interview.html