திங்கள், 25 செப்டம்பர், 2023

கோப்புகளில் குளறுபடிகள்: விடுதியின் வார்டனை சஸ்பெண்ட் செய்த உதயநிதி

 

சஸ்பெண்ட் செய்த உதயநிதி

உதயநிதி

கிருஷ்ணகிரிக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியை ஆய்வு செய்தார். ஆய்வு செய்தபோது, கோப்புகளில் குளறுபடிகள் இருந்ததால், விடுதியின் வார்டனை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு  நிகச்சிகளில்  கலந்து கொள்ள உள்ளார்.

கிருஷ்ணகிரி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென அங்கு உள்ள  அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியை ஆய்வு செய்தார். மாணவர்களுடைய வருகை பதிவேடு, மாணவர்களுக்கு  வழங்கப்படுகின்ற உணவு மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள  பொருட்களின் கோப்புகளை ஆய்வு செய்தார். ஆய்வுகளின் அடிப்படையில் கோப்புகளில் குளறுபடிகள் இருந்ததால் விடுதியின்  வார்டன் முருகனை சஸ்பெண்ட் செய்ய அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-suspends-hostel-warden-krishnagiri-1382516

Related Posts: