ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

ஹைதராபாத் காங்கிரஸ் செயற்குழு : நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?

 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மக்களவை மற்றும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் செயல்திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவராக மல்லிகாா்ஜுன காாகே தோந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, 84 உறுப்பினா்களைக் கொண்ட செயற்குழு கடந்த மாதம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. பெரும்பாலும் காங்கிரஸ் செயற்குழு டெல்லியில் நடைபெறும் நிலையில், தற்போது ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

தெலுங்கானாவில் CWC கூட்டத்தை நடத்துவது, தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் கட்சியின் பிரச்சாரத்தை உயர்த்துவதற்கான ஒரு முயற்சியாகவும், இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிஆர்எஸ் அரசாங்கத்தை அகற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்ற தெளிவான செய்தியை அனுப்புவதாகவும் கருதப்படுகிறது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் முதல் நாளில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவை மற்றும் 5 மாநில பேரவைத் தோ்தல்களில் கட்சியின் வெற்றியை உறுதி செய்யும் விரிவான செயல்திட்டம், அமைப்பு ரீதியிலான செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 5 மாநிலப் பேரவைத் தோ்தல்கள் நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ளன. மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக இத்தோ்தல்கள் கருதப்படுகின்றன.

கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியதாவது ;
நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. விலைவாசி உயாவு, வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.

மணிப்பூர், ஹரியாணா வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. பாஜக அரசை எதிா்கொள்ளும் வகையில், 27 கட்சிகள் ஒருங்கிணைந்த ‘இந்தியா கூட்டணியின் மூன்று கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இதனால், எதிாக்கட்சிகள் மீதான பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டுக்காக ரூ.4,000 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என்றார். இன்று இரண்டாவது நாளாக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

source https://news7tamil.live/hyderabad-congress-working-committee-what-are-the-resolutions-passed.html