சனி, 16 செப்டம்பர், 2023

தமிழகத்தில் இதுவரை நிஃபா வைரஸ் தாக்கம் எங்கும் இல்லை -அமைச்சர் மா சுப்ரமணியன்…!

 16 09 23

நிஃபா வைரஸை பொறுத்தவரை தமிழகத்தில் எல்லை மாவட்டங்களான 6 மாவட்டங்களிலும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் இதுவரை நிஃபா வைரஸ் தாக்கம் எங்கும் இல்லை என அமைச்சர் மா சுப்ரமணியன் என தெரிவித்தார்.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதரத்துறை உயர் அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பின்னர், டெங்கு தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது கூறியதாவது;

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு உயரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,டெங்கு குறித்து தலைமை செயலாளர் தலைமையிலும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள இணை துணை இயக்குநர்கள், டீன்கள் என 296 மருத்துவ அதிகாரிகளுடன் இன்று மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு தொடர்பாக கூட்டமானது தற்போது நடந்துள்ளதாக பேசியவர் இதில் கொசு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்க அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் உள்ள 12,000 மருத்துவ கட்டமைப்புகளிலும் இவை பின்பற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த ஆண்டு 4048 பேருக்கு டெங்கு பாதிப்பு என்பது அச்சப்பட வேண்டியது இல்லை எனவும் இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து பேசியவர் நிஃபா வைரஸை பொறுத்தவரை தமிழகத்தில் எல்லை மாவட்டங்களான 6 மாவட்டங்களிலும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,தமிழகத்தில் இதுவரை நிஃபா வைரஸ் தாக்கம் எங்கும் இல்லை.

திருவாரூர் பயிற்சி மருத்துவ மாணவி சிந்து உயிரிழந்தத்ய் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தவர் உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு ஏற்கனவே பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும்,அவருக்கு டெங்கு போன்ற எந்த வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.


source https://news7tamil.live/nifa-virus-has-not-been-affected-anywhere-in-tamil-nadu-minister-ma-subramanian.html