வியாழன், 21 செப்டம்பர், 2023

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்குள் ஓ.பி.சி ஒதுக்கீடு... காங்கிரஸ் குரலை எதிரொலிக்கும் சோனியா

 20 09 2023


so

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்குள் ஓ.பி.சி ஒதுக்கீடு... காங்கிரஸ் குரலை எதிரொலிக்கும் சோனியா காந்தி

2010-ல் ராஜ்ய சபாவால் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, யு.பி.ஏ அரசாங்கம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இல்லாத நிலையில் ஒ.பி.சி இடஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீட்டிற்கான தரவு எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியது.

மக்களவையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, ஓ.பி.சி பிரிவினருக்கு சட்டத்தில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், 2010 மார்ச்சில் ராஜ்ய சபாவில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைப் கொண்டுவந்த யு.பி.ஏ அரசாங்கம், வேறு கருத்தைக் கொண்டிருந்தது.

மார்ச் 9, 2010-ல் ராஜ்ய சபாவில் மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன், அப்போதைய சட்ட அமைச்சர் எம். வீரப்ப மொய்லி, மார்ச் 9, 2010-ல் விவாதத்திற்கு பதிலளித்தார்: “ஓ.பி.சி, சிறுபான்மையினர் மற்றும் மற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அறிந்தது போல், இன்று வரை, பட்டியல் சாதிகள்/பழங்குடியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது. 1931-க்குப் பிறகு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (சாதிகளுக்கான) எதுவும் செய்யப்படாததால், தேசம் முழுவதற்குமான தரவு எங்களிடம் இல்லை.” என்று கூறினார்.

“ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ளவர்கள் மற்றொரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருக்க முடியாது. ஓ.பி.சி மற்றும் சிறுபான்மையினருக்கு உண்மையான இடஒதுக்கீடு வேண்டுமென்றால், வேறு பல பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்” என்று கூறினார்.

மேலும், வீரப்ப மொய்லி கூறியதாவது: “இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒரு சட்டம் இருக்கும், இது இடங்களை நிர்ணயம் செய்வது, இடஒதுக்கீட்டை முடிவு செய்யும். தொகுதி நிர்ணயம் மற்றும் இடஒதுக்கீடு ஆகியவை மறுவரையறை நிர்ணயச் சட்டத்தைப் போலவே தனிச் சட்டம் மூலம் தீர்க்கப்படும்.” என்று கூறினார்.

வீரப்ப மொய்லி  ‘ஒதுக்கீடு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதை பா.ஜ.க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியபோது (பெண்கள் மசோதாவுக்குள் ஒதுக்கீட்டைப் பரிந்துரைக்கிறது) மொய்லி கூறினார்: “அது தவறாகக் கூறப்பட்டது. வாய் தவறி கூறப்பட்டது” என்று கூறினார்.

மோடி அரசு புதன்கிழமை கொண்டு வந்த மசோதா குறித்து பேசிய சோனியா காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரினார்.

இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. இந்த மசோதா நிறைவேறினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், அதே நேரத்தில், எங்களுக்கு கவலைகள் உள்ளன. நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்: கடந்த 13 ஆண்டுகளாக இந்தியப் பெண்கள் தங்கள் அரசியல் பொறுப்புக்காகக் காத்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்கச் சொல்கிறார்கள். சோனியா மேலும் கூறினார்: “எத்தனை ஆண்டுகள்? இரண்டு ஆண்டுகள், நான்கு ஆண்டுகள், ஆறு ஆண்டுகள், எட்டு ஆண்டுகள்? இந்தியப் பெண்களிடம் இந்த நடத்தை பொருத்தமானதா? இந்த மசோதாவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கோருகிறது. அதனுடன், பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் ஓ.பி.சி-களில் இருந்து பெண்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்... அதை உண்மையாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்” என்று சோனியா காந்தி கூறினார்.

இந்த மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அது இந்தியப் பெண்களுக்கு இழைக்கும் அநீதி என்று சோனியா காந்தி கூறினார்.


source https://tamil.indianexpress.com/india/sonia-gandhi-speech-womens-reservation-bill-obc-quota-upa-congress-1377817