சவுதி அரேபியா நாட்டின் மக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் விண்ணப்பித்த பெண் இஷ்ரத்தை... ஆள்-அட்ரஸ் சரிபார்ப்புக்காக... உ.பி. மாநிலம் அலிகார் நகர காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் கூப்பிட்டு வரவழைத்துள்ளனர் போலீஸ். மகன் மற்றும் உறவினருடன் காவல்நிலையத்திற்கு வந்தவரை... காவல்நிலையத்தின் சப் இன்ஸ்பெக்டர் மனோஜ் ஷர்மா துப்பாக்கியால் தலையில் சுட்ட சிசிடிவி காட்சி வைரல் ஆகியுள்ளது.
பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக, போலீஸ் தன்னிடம் பணம் கேட்டதாக சுடப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஊடக பேட்டி வீடியோவில் குற்றம் சாட்டுகிறார்கள். அந்த பெண்ணுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் ஊடக பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளனர். சிசிடிவி வீடியோவில் உள்ள சிகப்பு சட்டைக்காரரும், துப்பாக்கி வரவழைத்து அதை லோடு செய்து... பெண்ணை நோக்கி காட்டி மிரட்ட முயன்றதாக சாட்சி கூறியுள்ளார். அந்த வீடியோவும் வைரல் ஆகியுள்ளது.
தற்போது அந்த சப் இன்ஸ்பெக்டர் தப்பியோடி தலைமறைவு ஆகிவிட்டதாகவும் அவரை தேட போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Source Whatsapp share