புதன், 14 பிப்ரவரி, 2024

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தீர்மானம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல்!

 14 2 24 

மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையோடு நேற்று முன் தினம் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளிக்கவுள்ளார். இதனிடையே சட்டப்பேரவையில் இரண்டு அரசினர் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

முதலாவது தீர்மானத்தில்,  2026-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளது. மேலும் தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதாக தெரிவிக்கப்படவுள்ளது.

மற்றொரு தீர்மானத்தில், ‘ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும், ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர உள்ளார்.


source https://news7tamil.live/two-important-resolutions-in-the-tamil-nadu-legislative-assembly-filed-by-chief-minister-m-k-stalin.html

Related Posts:

  • தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்! தமிழச்சி - Tamizachi: தமிழகத்தில் #பாஜக பிரமுகர்கள் தொடர் படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பெண் தீக்குளித்து இறந்திருக்கி… Read More
  • பொய் செய்தி நாகை புகழேந்தி தேசத் தொண்டனாம்!.... முஸ்லிம்கள் கொலை செய்தார்களாம்!.....தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சன் தொலைக்காட்சியில் வன்முறை பேச்சு பேசினாங்க!..… Read More
  • News Drops First time in History , Pudukkottai dist, Face - No Rain fall ( No Seasonal, South East monsoon Rain)2013  … Read More
  • பித்ரா பித்ரா இரண்டு காரனங்களுக்காக பித்ரா எனும் தர்மம் கடமையக்கபட்டுள்ளது . நண்பளிகளிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மை படுத்… Read More
  • News Drops Copy from Dailythanthi … Read More