பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யஜனாவின் பயனாளிகளுக்கு 17வது தவணையை வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 18ஆம் தேதி வாரணாசி செல்கிறார். வாரணாசியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் உத்தரபிரதேச அரசுடன் இணைந்து நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில், 9.26 கோடி பயனாளிகளுக்கு தவணையாக ரூ.20,000 கோடியை பிரதமர் மோடி வழங்குவார்.
பயனாளியின் நிலையைச் சரிபார்ப்பது எப்படி?
முதலில் pmkisan.gov.in இல் உள்நுழையவும்.
முகப்புப் பக்கத்தில், பயனாளி நிலை (Beneficiary Status) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
பதிவு செய்யப்பட்ட ஆதார் எண் அல்லது வங்கி கணக்கு எண்ணை உள்ளிடவும்.
தவணையின் நிலையைக் காட்ட, பக்கத்தில், 'தரவைப் பெறு (Get Data)' என்பதைக் கிளிக் செய்யவும்.
பி.எம் கிஷான் யோஜனா அறிக்கையை பெறுவது எப்படி?
pmkisan.gov.in இல் அதிகாரப்பூர்வ பி.எம் கிசான் போர்ட்டலில் உள்நுழைக.
பின்னர் 'விவசாயிகள் கார்னர்' பகுதியைச் சரிபார்க்கவும்.
இந்தப் பக்கத்தில், ‘பயனாளி நிலை’ விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
இங்கே, நீங்கள் ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண் போன்ற தேவையான விவரங்களை உள்ளிட வேண்டும்.
பிறகு ‘Get Report’ என்பதைக் கிளிக் செய்யவும்.
அதன் பிறகு, உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை மற்றும் கட்டணங்கள் காட்டப்படும்.
source https://tamil.indianexpress.com/business/the-17th-installment-of-pm-kishan-nithi-scheme-is-released-on-18th-june-4765715