செவ்வாய், 18 ஜூன், 2024

TNEA 2024: இன்ஜினியரிங் கலந்தாய்வு; தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற டாப் கல்லூரிகளின் பட்டியல் இங்கே

 தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் செயல்முறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தன்னாட்சி (Autonomous) அங்கீகாரம் பெற்ற டாப் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பப் பதிவு நிறைவடைந்துள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் கவுன்சலிங் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், கல்வி ஆலோசகர் விவேக் தமிழகத்தில் உள்ள தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் டாப் கல்லூரிகள் எவை என்பதை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

வீடியோவின்படி, தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் வேலை வாய்ப்பு வீதம் அதிக அளவில் உள்ளது. இந்தக் கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டம் மற்றும் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஆகியவை மாணவர்களை இந்தக் கல்லூரிகளில் சேரத் தூண்டுகின்றன.

1). எஸ்.எஸ்.என் என அழைக்கப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காலவாக்கம், செங்கல்பட்டு 

2). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் 

3). தியாகராஜர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், மதுரை

4). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்

5). கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி 

6). வி.எஸ்.பி இன்ஜினியரிங் காலேஜ், கரூர்

7). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

8). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

9). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் 

10). ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், காஞ்சிபுரம்

11). சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, குன்றத்தூர், செங்கல்பட்டு 

12). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், காஞ்சிபுரம்

13). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்

14). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர் 

15). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்

16). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோயம்புத்தூர்

17). ஜே.என்.என் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங், திருவள்ளூர்

18). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்

19). அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப் கல்லூரி, காரைக்குடி 

20). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம் 

21). மெப்கோ ஸ்லங் இன்ஜினியரிங் காலேஜ், விருதுநகர் 

22). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு 

23). செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை 

24). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், திருவள்ளூர்

25). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை


source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-2024-top-25-engineering-colleges-which-gets-autonomous-under-anna-university-4765777