நாளை (15.09.2025) காலை 10.30 மணி அளவில், திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகில், ஓட்டு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொள்கிறேன்.
#வாக்கு திருட்டு பற்றிய கையெழுத்து பிரச்சாரம்.
எங்கள் வாக்குகளை திருடுவதை உடனடியாக நிறுத்துங்கள்.
'இந்திய குடிமக்களாகிய நாங்கள்,
வாக்காளர் பட்டியல் மோசடிகள் மற்றும் வாக்கு உரிமையை ரத்து செய்யும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்"
நம் ஜனநாயகம், ஒவ்வொரு வாக்காளரின் வாக்குரிமை மீது கட்டப்பட்டுள்ளது. இன்று அந்த அடித்தளம் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பல்வேறு தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில், லட்சக்கணக்கான வாக்காளர்களின் புகைபடங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம் பெறவில்லை. ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் இரண்டிற்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியுள்ளது. லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில சமூகத்தினர் குறி வைக்கப்பட்டு, அவர்களின் பெயர் திட்டமிட்டு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. உண்மையான வாக்காளர்களின் பெயரை நீக்க மோசடியான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இது அப்பட்டமான #வாக்கு திருட்டு பொது மக்களின் குரல்கள் திருட்டு.
தகுதி வாய்ந்த அனைத்து குடிமக்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எனவே, இந்த நாடு தழுவிய கையெழுத்து பிரச்சாரத்தில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என்று கோருகிறோம். இதன் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்தை வெளிப்படை தன்மையுடனும், பொறுப் புணர்வுடனும் செயல்பட வைத்து, தேவையான சீர்திருத்த நடவடிக் கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியு றுத்துகிறோம்.
எங்களின் முக்கிய கோரிக்கைகள்.
இந்திய தேர்தல் ஆணையம் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:
1. கம்ப்யூட்டர் உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டில் உள்ள அனைத்து சாதனங்களிலும் மிக எளிதாக உள்ளீடு செய்து சரிபார்க்கும் வகையில், வாக்காளர் பட்டியலை, புகைப்படங்களுடன் வெளியிட வேண்டும்.
2.ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் நீக்கப்பட்டவர்கள் பற்றிய முழுமையான விவரங்களை புகைப்படங்களுடன் வெளியிட வேண்டும்.
3.தவறான முறையில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க, அனைவரும் எளிதாக அணுகக்கூடிய முறையிலான, குறை தீர்க்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்.
4.வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை கடைசி நிமிடத்தில் நீக்கும், சேர்க்கும் முறையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதற்கான கடைசி தேதியை போதுமான கால அவகாசம் அளித்து முறையாக அறிவிக்க 4.வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை கடைசி நிமிடத்தில் நீக்கும், சேர்க்கும் முறையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதற்கான கடைசி தேதியை போதுமான கால அவகாசம் அளித்து முறையாக அறிவிக்க வேண்டும்.
5.திட்டமிட்டு உண்மையான வாக்காளர்களுக்கு எதிராக செயல்படும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் / முகவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.





