எலிக்காய்ச்சல் கடந்த மாதத்தில் மாத்திரம் 622 பேர்க்கு பீடிக்கப்பட்டுள்ளதாகவும் வருவடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 3,890 பேர்க்கு எலிக்காய்ச்சல் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோய்கள் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளரான, டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
இந்த நோய் குறித்து அடையாளம் காணப்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஒருவகை பக்றீரியா மூலமாக இந்தக் காய்ச்சல் பரவுவதுடன் நோயால் பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீர் மூலமாக இந்தப் பக்றீரியா வெளிச்சூழலுடன் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.