சென்னை: அற்புதமான வெளிநாட்டுச் சுற்றுலாவை முடித்து வந்தவர்களுக்கு, மோசமான அதிர்ச்சியைத் தரக்கூடியதாக இருப்பவை அவர்களுடைய கிரெடிட் கார்டுகளுக்கான பில்கள் தான். நீங்கள் கணக்கிட்ட தொகைக்கும், பில்லில் வந்துள்ள தொகைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத அளவிற்கு வேறுபாடுகள் இருக்கும். அதிலும் நீங்கள், வெளிநாடுகளில் கிரெடிட் அட்டைகளுக்கு விதிக்கப்படும் பல்வேறு கட்டணங்களையும் கணக்கில் கொள்ளாத போது, தலை சுற்றி விடும்!
வெளிநாடுகளில் கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தும் போது, சில நட்பு ரீதியான கட்டணங்களை வங்கிகள் விதிக்கின்றன.
இதோ நீங்கள் வெளிநாடுகளில் உங்களுடைய கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்த திட்டமிடும் போது, கணக்கில் கொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்களைக் கொடுத்துள்ளோம்.
நாணய மாற்ற கட்டணம்
நீங்கள் இந்திய கிரெடிட் அட்டையை வைத்திருப்பதால், வங்கிகளும் மற்றும் விசா மற்றும் மாஸ்டர்கார்டு போன்ற நிறுவனங்கள், 1 முதல் 2 சதவீதம் வரையிலும் வெளிநாட்டு நாணய மாற்ற கட்டணமாக விதிக்கின்றன.
வெளிநாட்டுப் பரிவர்த்தனை கட்டணம்
இந்த அட்டைகளை வழங்குபவர்கள், எந்த நாட்டின் நாணயமாக இருந்தாலும், பரிவர்த்தனைக்கான தொகையில் 2.5 முதல் 3.5 சதவீதம் வரையிலும் கட்டணங்களை விதிக்கலாம்.
பண முன்தொகை கட்டணம்
பண முன்தொகை (Cash Advance) என்பது இந்தியாவில் கூட அதிகமான செலவைக் கொண்டதாகவே உள்ளது. நீங்கள் ஒவ்வொரு முறை பணத்தை எடுக்கும் போதும் 1 முதல் 4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். எனினும், இது உங்களுடைய உள்ளூர் பணம் எடுக்கும் செயலுடன் சேர்ந்ததாக இருக்கும்.

நாணயம் மாற்றும் நாள்
நீங்கள் பொருளை வாங்கிய நாள் தான் நாணயம் மாற்றம் செய்த நாளாக இருக்க வேண்டுமென்பதில்லை. வியாபாரம் செய்தவர் உங்களுடைய பரிவர்த்தனையை எந்த நாளில் குறிப்பிட்டுள்ளார் என்பதைப் பொறுத்ததாகும்.
இது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வேறுபாட்டைக் கொண்டிருக்கலாம். எனவே, நீங்கள் பில் தொகையுடன் சேர்த்து கணக்கிட்டத் தொகை, இந்த மாறுபட்ட நாட்களைக் கொண்டு, அதற்கேற்ப அந்நாளில் சந்தையில் நாணய மதிப்புக்கு ஏற்றவாறு இருக்கும்.
மேற்கண்டவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளும் போது, நீங்கள் 5 முதல் 6 சதவீதத்தை அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, இவ்வகையான செலவுகளை நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.
ரொம்ப முக்கியம்
நீங்கள் அடிக்கடி வெளிநாடு செல்பவராக இருந்தால், உங்களுடைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற கிரெடிட் கார்டுகளை வாங்குங்கள் மற்றும் விமானப் பயணத்திற்கான தள்ளுபடிகளை வழங்குவதையும், பிற சலுகைகளையும் கவனியுங்கள்