மணிப்பூரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மணிப்பூரில் 7 பேரும், பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 33 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மணிப்பூர் மாநிலம் தமென்ங்லாங் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 17 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் அசாம், திரிபுரா, மேற்குவங்கம், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டது.
இதனால் பெரும்பாலான வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகம் பாதிப்பிற்குள்ளான மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவம், விமானப்பபடை, தேசிய பேரிடர் மீட்புக்குழு ஆகியவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நிலைமை குறித்து கேட்டறிந்தார். மேலும், தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.