ஞாயிறு, 24 ஜனவரி, 2016

கிச்சான் புகாரியை மறந்துவிட்டோமா ?

தமிழக முஸ்லிம்களின் துரதிர்ஷ்டம் - மறதி.
ஆம் நேற்று நடந்ததை இன்று மறந்து சகஜமாக வாழ பழகிவிட்டோம்.
கிச்சான் புகாரி....
பெயரை எங்கோ......கேள்விப்பட்டது போல் தோன்றுகிறதா!!!
ஆம் சகோதர சகோதரிகளே.....
கர்நாடகாவின் தேர்தல் நாடகத்தில் பலியான ஒரு தமிழக இஸ்லாமிய சகோதரர் இவர்.
13 ஆண்டுகளுக்கு மேல் கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்துவிட்டு நிரபராதி என விடுதலை அடைந்தவர்.
தான் சிறைபட்டிருந்த காலத்தில் தன்னோடு இருந்த சக அப்பாவி சிறைவாசிகளை மீட்டிட அவர்களின் வழக்கிற்காக நிதி திரட்டி உச்சநீதிமன்றம் வரை வழக்கை எடுத்து சென்றதுதான் இவர் செய்த மாபெரும் குற்றம்.
கழுகு பார்வை பார்த்துக்கொண்டிருந்த காவல்துறைக்கு கர்நாடகாவில் பிஜேபி அலுவலகத்தின் வெளியில் நடந்த குண்டு வெடிப்பில் இதுதான் சரியான நேரம் என்று அநியாயமாக இவர் பெயரை சேர்த்தது சிறையில் தள்ளியது தமிழக மற்றும் கர்நாடக காவல்துறை.
ஏறத்தாழ ஒரு வருட காலம் சிறையில் இவர் பட்டுக்கொண்டிருக்கும் துன்பம் சொல்ல முடியாதவை. இவரை பிரிந்து துயரத்தால் வாடும் இவரது குடும்பத்தின் சோகம் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.
நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞ்சராக பணியாற்றும் சகோதரர் ஒருவர் புஹாரி அவர்களை சந்தித்து வந்ததாக தொலைபேசியில் தெரிவித்தார். ஏற்கனவே முதுகு வலியால் அவதிப்படும் புஹாரி அவர்கள் இப்போது 20 கிலோ உடல் எடை குறைந்துள்ளதாகவும், அவருடைய உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அன்பான சகோதர, சகோதரிகளே, இயக்க தலைவர்களே, மனித உரிமை ஆர்வலர்களே;
இவரை நீங்கள் மறந்துவிட்டீர்களா ?
இவரின் குடும்பத்தை மறந்துவிட்டீர்களா ?
இவர் கைதான போது துடிதுடித்த இதயங்கள் இப்போது அமைதியாய் இருப்பது ஏனோ ?
அநியாயமாய் பிணை கூட கிடைக்காமல் சிறைவாசம் அனுபவிக்கும் இந்த சகோதரரை பிணையிலாவது மீட்டு அவர் குடும்பத்திடம் ஒப்படைத்திட இறைவனிடம் இரு கரம் உயர்த்துவோம்.
அவரவர் சார்ந்திருக்கும் இயக்க தலைவர்களிடம் இது பற்றிய விடயத்தில் முடிந்த அளவு வலியுறுத்துவோம்.
இவரை பிணையில் எடுப்பதற்கு வேறு என்ன வலிகள் உள்ளன என்பதை யாரேனும் அறிந்தால் பதிவிடுங்கள்.