நேற்று திருப்பூரில் தனியார் பள்ளியில் நடந்த ஒரு துயரமான சம்பவம் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் கல்லை தலையில் போட்டு, அடித்து கொலை செய்யப்பாட்டான்.
யார் இந்த குற்றம் நிகழ காரணம்? யாரை குற்றம் சொல்வது? இந்த குற்றத்திற்கு முழு காரணம் நாம் தான் நாம் அனைவரும் தான்.
குழந்தைகள் மனதில் வன்முறையை விதைக்கிறோம். இன்றைய சினிமா, தொலைகாட்சி, குழந்தைகளுக்கான கார்ட்டூன் முதல் கொண்டு அனைத்திலும் வன்முறை. குழந்தைகள் எதை விரும்பி பார்க்கீறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிப்பது இல்லை.
தமிழக விளையாட்டு துறையும் அங்கீகாரத்துடன் இன்று பள்ளிகளிலும் தற்காப்பு கலை என்ற பெயரில் சிலம்பம், கராத்தே, டேக்வாண்டோ போன்ற கலைகளை மூன்றாம் வகுப்பு முதலே கற்று தருகிறார்கள்.
தற்காப்பு கலை கற்ற மாணவன் தன் வித்தையை பெருமையாக சகமாணவனிடம் காண்பிக்க அது வினையாக முடிந்தது. எனவே குழந்தைகள் இடம் வன்முறையை பெற்றோர்கள் ஆகிய நாம்தான் வளர்க்கிறோம்.
இதில் எங்கு குழந்தைகளை குற்றவாளியாக கருத முடியும்?
ஆறாம் வகுப்பு மாணவனுக்கு எப்படி கொலை செய்ய வேண்டிய எண்ணம் வரும்?
அந்த மாணவன் கூறிய பதில் WWF மாதிரி சண்டை போட்டேன் அவன் கீழே விழுந்தான் அதில் வருவது போல் கல்லை தூக்கி அவன் மேல் போட்டேன்.
அந்த குழந்தை இப்போது கூர்நோக்கு இல்லத்தில். அந்த குழந்தைக்கு தான் என்ன தவறு செய்தோம் என்பதே தெரியாது. அந்த குழந்தைக்கு இனி எதிர் வரும் நாட்கள் எப்படி இருக்கும்?
எல்லா குழந்தைகளையும் குழந்தைகளாக பார்ப்போம். குழந்தைகள் குற்றங்களை புரிவதில்லை. நல்லதை விதைக்க வேண்டிய இடத்தில் நாம் தான் வன்முறையை விதைக்கிறோம். மனசாட்சியுடன் நடந்து கொள்வோம்.