வெள்ளி, 29 ஜனவரி, 2016

நக்கம்பாடியில் தவ்ஹீத் ஜமாஅத் மீதான அடக்குமுறை.....!!


நாகை மாவட்டம் நக்கம்பாடியில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்காக TNTJ வினர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
உடனே வந்த ஊர் ஜமாஅத் நிர்வாகம் யாரை கேட்டு பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றனர்.
நாங்கள் காவல்துறையில் அனுமதி வாங்கியுள்ளோம் என்று TNTJ வினர் கூறியுள்ளனர்.
காவல்துறையிடம் அனுமதி வாங்கினாலும் எங்களிடமும் அனுமதி வாங்க வேண்டும் என்று நக்கம்பாடி ஜமாஅத் நிர்வாகிகள் TNTJ வினரிடத்தில் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனநாயக நாடான இந்தியாவில் எழுத்துரிமையும், பேச்சுரிமையும் அனைவருக்கும் பொதுவானது. காவல்துறையில் அனுமதி பெற்று பிரச்சாரம் செய்யும்போது எங்களிடமும் அனுமதி பெற வேண்டுமென்றால் இதற்கு பெயர் என்ன ? கட்டப்பஞ்சாயத்து.