ஞாயிறு, 31 ஜனவரி, 2016

ஒழிப்பு மாநாட்டை நாங்கள் தடுக்கவில்லை

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நாங்கள் தடுக்கவில்லை – இந்து மகா சபை – ஜமாஅத்துல் உலமா மறுப்பு

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று நடக்கும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டால் தமிழகத்தில் கோவில்கள் தாக்கப்படும் என்று தவறான செய்தி பரப்பட்டுவிட்டதால் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நாங்கள் அதை எதிர்த்தோம்.ஆனால் மாநாட்டின் உண்மை நோக்கத்தை தற்போது உணர்கிறோம் என்று இந்து மகா சபை மாநில நிர்வாகி கங்காதரன் பேசிய ஆடியோ தங்க்கள் பார்வைக்கு.
மேலும் இஸ்லாமியர்கள் சார்பில் நடத்தப்படும் இம்மாநாட்டிற்கு செல்லக் கூடாது என மாநில ஜமாஅத்துல் உலமா சொல்லவேயில்லை எனவும் ஜமாஅத்துல் உலமா பெயரில் போலியான லெட்டர்பேட் அடித்து வதந்திகளைப் பரப்பியதாகவும் அந்த லெட்டர் பேடில் ஜமாஅத்துல் உலமாவின் கையொப்பமோ முத்திரையோ இல்லை எனவும் ஜமாஅத்துல் உலமா தரப்பில் செய்தி வருகிறது.
அதேபோல் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை சீர்குலைக்க இந்துத்துவாவினர் போல் வெளியிட்ட வீடியோவும் கன்னியாகுமரியை சேர்ந்த தர்கா காரர் உடையது என்வும் விஷயம் கசிந்தது.