வெள்ளி, 29 ஜனவரி, 2016

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் கவிதா அறிவிப்பு.

Mohideen Jailani's photo.


இஸ்லாமிய சமூகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் சகோதரி அமைச்சர் கவிதா அவர்களே!

முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு கொடுத்தே தீருவோம்:தெலுங்கானா எம்.பி. உறுதி!
நீதிமன்றம் குறுக்கே நிற்க விடமாட்டோம் எனவும் சூளுரை !!
ஒன்றுபட்ட ஆந்திராவில், முஸ்லிம்களுக்கு 5% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டபோது, நீதிமன்றம் தடை விதித்தது போன்ற நிலையை தெலுங்கானாவில் அரங்கேற விடமாட்டோம் என்கிறார், TRS எம்.பி, கவிதா.
இதற்கு முன்னர், முஸ்லிம் இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்த நீதிமன்றம், பின்னர் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50% அளவுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதியை காரணம் காட்டி, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 4 சதவிகிதமாக குறைத்தது.
தெலுங்கானா மாநிலத்தில் இதுபோன்ற அபத்தங்களை அரங்கேற விடமாட்டோம் என உறுதிப்படக் கூறியுள்ளார், தெலுங்கானாவின் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.பி.யுமான கவிதா.
நிசாமாபாத் பாராளுமன்ற உறுப்பினரான கல்வகுந்தலா கவிதா (K. கவிதா) எம்பி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது:
முஸ்லிம் செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு:
ஆந்திராவில் 5% இட ஒதுக்கீட்டை வழங்கியபோதே நாங்கள் படாத பாடு பட்டோமே, நீங்கள் 12% இட ஒதுக்கீட்டை வழங்குவதாக அறிவித்துள்ளீர்களே எனக் கேள்வி எழுப்பினார்.
காங்கிரசோடு எங்களை ஒப்பிடாதீர்கள், காங்கிரஸ் அரசில், பெயரளவில் அமைச்சராக்கப்படும் முஸ்லிம்களுக்கு, சிறுபான்மை நலத்துறை, வக்ப் வாரியம் உள்ளிட்ட முக்கியத்துவம் இல்லாத துறைகள் தான் வழங்கப்பட்டு வந்தது.
நாங்களோ, முஸ்லிமுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்துள்ளதோடு, வருவாய்த்துறை போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளையும் அவரிடம் கொடுத்துள்ளோம்.
11 அமைச்சர்களைக் கொண்ட தெலுங்கானா அமைச்சரவையில், மேலும் ஒரு முஸ்லிமுக்கு வாய்ப்பளிக்கும் திட்டமும் உள்ளது என்றார், கவிதா.
50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லும் உச்சநீதிமனறம், தமிழகத்தில் உள்ள 69%, கர்நாடகத்தில் அமலில் உள்ள அதிகப்படியான சதவிகித இட ஒதுக்கீட்டை குறித்து வாய் திறக்காதது ஏன் எனக்கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம் இட ஒதுக்கீடு விஷயத்தில் தெலுங்கானா முதலமைச்சர் "KCR" (K Chandrashekhar Rao), மிகவும் தெளிவான பார்வையோடும் தீர்க்கமான முடிவோடும் இருக்கிறார், என்றார், அவர்.
தற்போது அமலில் உள்ள (OBC 25%, SC 15%, ST 6% MUSLIM 4% = Total 50%) என்பதை மாற்றியமைத்து,
முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக, தெலுங்கானாவில், இட ஒதுக்கீட்டின் அளவை 64% அளவுக்கு உயர்த்தி சட்டம் இயற்றப்படும் என்றார் கவிதா எம்.பி.

மேலும் இதுபோன்ற ஒரு அறிவிப்பினை ஒரு ஒப்புக்காகவாவது அறிவிக்கும் மனது இன்றைய்ய தமிழகத்தை ஆளும் வர்க்கத்தினரிடம் உள்ளதா?
இல்லையெனில் வரும் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள், தக்கபாடம் புகட்டுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.