வெள்ளி, 29 ஜனவரி, 2016

முபட்டி சிர்மிகு கிராமமாக மாற சில வழிமுறை


1) முற்றிலும் சிமெண்ட் சாலை
2) முறையான குடிநீர் விநியோகம்
3) சாக்கடை வடிகால் கால்வாய் சாலை மற்றும் வீதி இருபுறம்
4) மலை நீர் வடியும்  கால்வாய் தனியாக
5)  மலை நீர் சேகரிக்க தனி குளம்.  சேர்க்க மற்றும் சுத்திகரிக்க, தனி குளம் அமைக்கவேண்டும். (அல்லது தற்போதுள்ள குளம் (சகரன்குலம் , செங்குளம் - இவைகளை பயன்படுத்தலாம் )
6) சாக்கடை நீர் சேகரிக்க தனி குளம்
7) பொது இடம் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
8) தெரு மின் விளக்கு, குடிநீர் குழாய், சாலை , துரிதமாக பழுது நீக்கவேண்டும் .
9) அங்கன் வாடி பொருட்கள் விநியோகம் முறைபடுதவேண்டும்.  வார்ட் வாரியாக கடைகள் அமைக்க வேண்டு,
10) அரசு வழங்கும் உதவிகளை ( முதியோர் ஒய்வ் ஊதியம் , அரசு உதவி தொகை , அரசு சலுகைகள், கல்வி உதவி தொகை) போன்றவை மக்களுக்கு எடுத்து கூறி அதற்கான வழிமுறை , வழிவகை செய்ய  வேண்டும். முறையான பொது அறிவிப்பு செய்ய வேண்டும்.
11) பஞ்சயத் அலுவலகத்தில் -பொது சேவை மையம் அமைக்க வேண்டும்.
12) தூய்மை , சுகாதாரத்தை  , மக்களை பழக்க வேண்டும் , பொது கழிப்பிடம் கட்டவேண்டும்.  (பொது இடத்தில குப்பை கொட்ட அனுமதிக்க கூடாது , மீறுவோர் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

13) மேலும் சுமார் 30 வீடு கழிப்பறை கழிவு - நேரடியாக , சகரன்குலத்தில் கலைகிறது , கழிவு நீர் , மற்றும் கழிப்பறை கழிவு , சேர்க்க மற்றும் சுத்திகரிக்க, தனி குளம் அமைக்கவேண்டும். (பாதல சாக்கடை அமைக்கலாம் )

14) ஊருக்குள் உள்ள அரசு பொது இடத்தை, வீடு இல்லாதவர்க்கும் , குடுசை வீட்டில் உள்ளவரை மாற்ற ஆவன செய்ய வேண்டும்.

15) வீடு வரி, வசுலை முறை படுத்தி , கட்ட தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

16) நமது பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால், வட்டி இல்ல கடன் வழங்க , பொது மனிதர்களைவைத்து  அமைப்பு உருவாக்கி, வட்டி இல்ல கடன் வழங்க வேண்டும் .
17) சுய தொழில் தொடக்க , சிறுதொழில் முகம் நடத்தவேண்டும்.
18) சமையல் எரி வாயு சிலிண்டர் - விநியோகம்  முறைபடுதவேண்டும் .
19) தற்போது இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் -24 மணி நேரமும் மருத்துவர்  இருக்கவேண்டும் , கூடுதல் படுக்கை கொண்ட , நவீன உபகரணங்கள் வாங்கவும் சம்மந்த பட்ட துறைக்கு - கோரிக்கை வைக்க வேண்டும்.

20) அரசு பள்ளியை - மேல்நிலை அந்தஸ்து தொடர்து முறை இடவேண்டும். மேலும் மாணவர்களுக்கு முறையான சுகாதார வசதிகள் - கழிப்பிடம் , விடுதி , அமைக்க வலியுறுத்த வேண்டும்.

21)  நமது பகுதியில் விவசாயம் நிலம் அதிகமாக இருப்பதால் , விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் , விவசாயத்தை உக்குவிக்க வேண்டும் , நமது பகுதிகேற்ப விளையும் ரகம், மற்றும் பயறு வகைகளை பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும், விழிப்புணர்வு முகம் நடத்தவேண்டும்.

22) அரசு பொது இடத்தில் மரம் நடவேண்டும் , தற்சமயம் சாலை ஓரம் மட்டும் உள்ளது ,

23) பொது நுலகத்தை விரிவு படுத்தவேண்டும்

24) இலவச - இன்டர்நெட்  சேவை மையம் அமைக்க வேண்டும் ( மாணவர்கள், விவசாயி , தொழில் முனைவோர் , பொது தகவல் , பயன் )பட்டிக்கு மட்டும்.

25) கல்வி , அரசியல் , பொருளாதாரம் , அருவியல் -துறைகளில்   மாணவர்களை  உக்குவிக்க வேண்டும் .

26) விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை - உக்க படுத்தவேண்டும் .

27) மகளிர் சிறப்பு பேருந்து - இயக்க கோரிக்கை  தொடர்து வைக்க வேண்டும்.

28) பள்ளி 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வு மையம் அமைக்க - தொடர்ந்து வழிவகை செய்யவேண்டும்.

29)குப்பைகளை , மக்கும் குப்பை , மக்கத குப்பை என்று தரம் பிரித்து மர்சுலர்ச்சி செய்யவேண்டும்.

--- சமூக ஆர்வலர் / இயற்கை நல ஆர்வலர் :  ஹ. மு . முபட்டி