சனி, 30 ஜனவரி, 2016

திருச்சி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு வரக்கூடிய நமது சகோதர்களுக்கும்


நமது ஜமாத் சார்பில் வாகனங்களில் வரக்கூடிய சகோதரர்களுக்கு சில முக்கிய அறிவுரைகள்.
முதலில் நம்முடைய அழைப்பை ஏற்று நம்முடன் மாநாட்டிற்கு வரக்கூடிய சுன்னத்ஜமாத் சகோதர்களுக்கு முன்னுறுமை கொடுக்கவும்
அடுத்து புதிதாக ஏகத்துவ கொள்கையை ஏற்ற சகோதர்களுக்கும் முன்னுறுமை கொடுப்போம்
அவர்களுடைய தேவைகளை உடனே பூர்த்தி செய்யவும்
90 சதவீதம் நம் ஜமாஅத் சார்பாக வாடகை வாகனங்களில் தான் திருச்சிக்கு வருகிறோம். அதனால் வாகன ஓட்டுனர், வாகனம் ஓட்டும்போது மது அருந்தி உள்ளாரா என்பதை ஊர்ஜிதபடுத்தி கொள்ளுங்கள். அவர் மது அருந்தி இருந்தால் எக்காரணம் கொண்டும் அவரை தொடர்ந்து வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள்.
கை குழந்தளைகளை கொண்டு வருபவர்கள் ஒரு குழந்தைக்கு 10 நாப்கின்களாவது கைவசம் வைத்து கொள்ளுங்கள்.
தலைவலி தைலம், தலைவலி மாத்திரை மறக்காமல் எடுத்து கொள்ளுங்கள். மேலும் நேரத்துக்கு மாத்திரை உட்கொள்ள கூடிய சகோதரர்கள் உங்களுக்கு தேவையான மாத்திரை மருந்துகளை மறக்காமல் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
நீங்கள் வரும் வாகனத்திலும் சரி, மாநாட்டு திடலிலும் சரி தண்ணீருக்கு அல்லாஹ்வுடைய கிருபையால் எந்த பஞ்சமும் இருக்காது. அதனால் பெரிய பெரிய தண்ணீர் பாட்டில்களை கொண்டு வந்து வீண் சுமையை சுமக்காதீர்கள்.
பலருக்கு வாகனம் ஓடிக்கொண்டு இருக்கும்போது வாந்தி ஏற்ப்படும். அவர்கள் கைகளில் எப்போதும் ஒரு பிளாஸ்டிக் கவரை தயாராக வைத்து கொள்ளவும். வாந்தி வரும் போது எக்காரணம் கொண்டும் தலையை வெளியே நீட்டி விடாதீர்கள். எதிரே வரும் வாகனம் மோதி உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். [அல்லாஹ் பாதுகாப்பான்]
வாந்தியை தடுக்க எலுமிச்சை பழத்தை முகர்ந்து கொள்ளுங்கள். எலுமிச்சை வாசனை வாந்தி வருவதை ஓரளவு தடுக்கும்.
5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை அழைத்து வருபவர்கள் உங்கள் முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றை எழுதி உங்கள் குழந்தையின் சட்டை பாக்கட்டில் வையுங்கள். குழந்தை தவறினாலும் இன்ஷா அல்லாஹ் விரைவாக உங்களிடம் வந்து சேர உதவியாக இருக்கும். பெரும்பாலும் உங்கள் குழந்தைகளுக்கு உங்களின் கைப்பேசி எண்ணை மனனம் செய்து கொடுப்பது ஆக சிறந்தது.
பயணத்தில் கூடுமானவரை காரமான உணவு வகைகளை தவிர்த்து கொள்ளுங்கள்.
பெண்கள் எக்காரணம் கொண்டும் அதிக நகைகளை அணிந்து கொண்டு வர சம்மதிக்காதீர்கள். கூடுமானவரை கவரிங் நகைகளை அணிந்து வருவது ஆக சிறந்தது.
வாகனம் புறப்படும் முன் பயண துவாவை ஓத மறந்து விடாதீர்கள்.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பான முறையில் மாநாட்டுக்கு சென்று வர உதவி செய்வானாக.