வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசலை தமுமுக 01.08,2010 அன்று அதிரடியாக மீட்டது.
அன்று மாலை அஸர் தொழுகையில் இருந்து தொடர்ச்சியாக தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.
20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பள்ளியை சுற்றி குடியிருப்புகளும், பள்ளிகூடம் போன்றவற்றை ஜமாத்தார்களின் உதவியுடன் அமைப்பதற்கான முயற்சிகளை தமுமுக தற்போது எடுத்து வருகின்றது.
தமுமுகவினரின் பள்ளிவாசல் மீட்புபணிகள் தமிழகம் முழுக்க செயல்படும் ஜமா அத்துக்களால் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.