முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கு ஒரே வழி – அவசியம் படிங்க
முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கு தேர்தலை முன்னிட்டு போராடுவதால் ஏற்படும் இழப்பு:
போராட்டத்திற்காக மக்களின் நிதி , உழைப்பு அனைத்தும் வீனாகும்.அதையும் தாண்டி போராடினால் அரசியல்வாதிகள் தேர்தலை முன்னிட்டு விடுதலை செய்வதால் அரசுக்கு சாதகத்தை விட பாதகமே மிஞ்சும்.
இப்போது சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டால் ஆளுங்கட்சிக்கு எதிராக இந்துத்துவா வேலை பார்க்கும் என்பதால் ஆளுங்கட்சி தற்போது விடுதலை செய்ய எத்தனிக்கமாட்டார்கள்.
அதற்கு பதிலாக தேர்தல் முடிந்த பின் யார் ஆட்சியில் அமர்கிறார்களோ அந்த துவக்கத்தில் போராட்டம் நடத்தினால் அதில் விடுதலைக்கு 100 சதம் சாதகம் உள்ளது.
1. ஆட்சியாளர்கள் விடுதலை செய்ய ஆணையிடுவார்கள்.
2.எதிர்கட்சி தரப்பில் என்னதான் எதிர்ப்பு வந்தாலும் அது பாராளுமன்ற தேர்தல் வரை எதிர்கட்சிகள் ஞாபகம் வைத்திருக்காது.
எனவே சிறைவாசிகளின் விடுதலைக்குப் போராடுபவர்கள் கவனமாக செயல்படுங்கள்தேர்தல் நேரத்தில் போராட்டத்தை நடத்தி இயக்கத்தை வளர்ப்பதைவிட தேர்தல் முடிந்த உடன் போராட்டம் நடத்தி சிறைவாசிகளை மீட்டெடுங்கள்.