RSSன் முதுகெலும்பை முறிப்போம் : 'ஆப்' கட்சியின் மூத்த தலைவர் 'பிரஷாந்த் பூஷன்' பேட்டி !
வக்ப் வாரிய சொத்துக்களை மீட்கவும் உறுதி !!
டெல்லியில் ஆட்சிக்கு வந்துள்ள ஆம் ஆத்மி (AAP) கட்சியின் மூத்த தலைவர் பிரஷாந்த் பூஷன், நேற்று நடத்திய 'முஸ்லிம் பத்திரிக்கையாளர்' சந்திப்பில், வக்ப் சொத்துக்களை மீட்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அளித்தார்.
தாங்கள் ஆட்சிக்கு வந்த மறுநாளே, டெல்லியில் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளை கண்டுணர்ந்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க குழு அமைத்துள்ளதை நினைவு படுத்தினார்.
தலைநகர் டெல்லியில் இதுவரை அமைந்த ஆட்சிகளில், முதல் முறையாக முஸ்லிம் அமைச்சர் எவரும் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்த அவர், இந்தக் குறை தெரியாத அளவிற்கு நாங்கள் நடந்துக் கொள்வோம் என்றார்.
ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பாசிச சக்திகளுக்கு 'ஆப்' கட்சி சிம்மசொப்பனமாக செயல்படும் என்றார், பூஷன்.
உருது மொழியை இரண்டாவது ஆட்சி மொழியாக அறிவித்த முந்தைய காங்கிரஸ் அரசு, அரசு அலுவலகங்களில், உருது தெரிந்த அரசு அலுவலர்களை எங்கும் நியமிக்கவில்லை என்றார்.
வக்ப் சொத்துக்களை மீட்பது, சிறுபான்மை ஆணையத்தை சீரமைப்பது, உருது அகாடமிக்கு உயிர் கொடுப்பது, மாநகராட்சிப் பள்ளிகளில் உருது மொழியை போதிக்க ஆசிரியர்களை நியமிப்பது,
காவல்துறை சித்திரவதைகளிலிருந்து பாதுகாப்பது உள்ளிட்ட, முஸ்லிம்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார், வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்.